அடேயப்பா!!! என்ன ஒரு பிரமாண்டம். 'பாகுபலி 2' விமர்சனம்

  • IndiaGlitz, [Thursday,March 16 2017]

எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' படத்தின் டிரைலர் சற்று முன்னர் இணையதளங்களில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. 'பாகுபலி' முதல் பாகத்தையே ஹாலிவுட் படங்களுக்கு இணையான பிரமாண்டம் என்று விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த படம் அதனையும் தாண்டி ஹாலிவுட் படத்தையே மிஞ்சும் அளவுக்கு உள்ளது.

2 நிமிடம் 24 வினாடிகள் ஓடும் இந்த படத்தின் டிரைலர் கற்பனைக்கும் எட்டாத அளவில் உள்ளது. பிரமாண்டம் என்ற வார்த்தையையும் தாண்டி தமிழில் வேறு ஏதாவது வார்த்தைகள் இருக்கின்றதா? என்பதை யோசிக்க வைக்கின்றது. பாகுபலியை கட்டப்பா பின்னால் இருந்து வாளால் குத்தும் காட்சி, சிவகாமி ரம்யா கிருஷ்ணனின் கண்ணின் வழியும் கண்ணீர், கண்களில் இருந்து ரத்தம் வடியும் பாகுபலி பிரபாஸின் குளோசப் காட்சி, உலகில் இப்படி ஒரு இடம் இருக்குமா என்று எண்ணும் அளவிற்கு மலையும் அருவியும் அரண்மனையும் அமைந்துள்ள காட்சி, தமன்னாவின் சொக்க வைக்கும் அழகு, அனுஷ்காவின் கம்பீரம், அரண்மனையின் லாங் ஷாட், ராணாவின் ஆஜானுபாகுவான தோற்றம், முதல் பாக போர்க்காட்சியை இருமடங்கு பிரமாண்டம் என சொல்லிக்கொண்டே போகலாம்.

மேலும் எம்.எம்.கீரவாணியின் அபாரமான பின்னணி இசை, செந்தில்குமாரின் உலக தர ஒளிப்பதிவு, கோட்டகிரி வெங்கடேச ராவின் கச்சிதமான எடிட்டிங் என எந்த வகையிலும் குறை கண்டுபிடிக்கப்படாத டிரைலராக உள்ளது. இந்த படத்தின் டிரைலர் முழு படத்தையும் பார்க்க வேண்டும் என்ற தூண்டுதலை பல மடங்கு உயர்த்தியிருப்பது என்று கூறினால் அது மிகையில்லை. ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் வசூல் இதுவரை இந்திய திரைப்பட வரலாறு சந்தித்திராத வசூலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகுபலி 2 படகுழுவினர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.

More News

படப்பிடிப்பின்போது பிரபல தமிழ் நடிகர் காயம்

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவர் அதர்வா. இவர் தற்போது 'செம போத ஆகாதே', 'ருக்குமணி வண்டி வருது', 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், 'இமைக்கா நொடிகள்' மற்றும் ஒத்தைக்கு ஒத்தை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்...

நயன்தாரா படத்தில் முதன்முதலாக தமன்னா

கோலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது டோரா', 'இமைக்கா நொடிகள்', 'அறம்', 'கொலையுதிர்க்காலம்', 'வேலைக்காரன்', ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் 'கொலையுதிர்க்காலம்' திரைப்படம் பிரபல இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் தயாரிப்பில் சக்ரி டோலட்டி இயக்கி வரும் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது...

மேடமி டுஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் பிரபல பாடகியின் மெழுகு சிலை

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள மேடமி டுஸாட்ஸ்' என்ற அருங்காட்சியகத்தில் உலகப்புகழ் பெற்றவர்களின் மெழுகு உருவச்சிலை நிறுவப்பட்டிருப்பது அனைவரும் அறிந்ததே. இந்திய பிரதமர் மோடி , அமிதாப்பச்சன் உள்பட பலருடைய மெழுகுசிலை இங்கு உள்ளது. லண்டன் மட்டுமின்றி உலகின் முன்னணி நகரங்களிலும் இதன் கிளைகள் உள்ளன...

'தளபதி 61' படக்குழுவினர்களின் அன்பு வேண்டுகோள்

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் 'விஜய் 61' திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மூன்று முக்கிய பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளதால் 'மூன்று முகம்' என்ற டைட்டில் இந்த படத்திற்கு வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது...

பெண் சாதனையாளர் விருது கொடுத்த அமைப்பிடம் நயன்தாரா மன்னிப்பு கேட்டது ஏன்?

சென்னையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இயங்கி வரும் ரெயின் டிராப்ஸ் என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் சாதனை செய்த பெண்களுக்கு 'பெண் சாதனையாளர் விருது வழங்கி கெளரவித்து வருகிறது. இந்த ஆண்டின் இந்த விருதுக்கு கோலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தேர்வு செய்யப்பட்டு அவருக்கு விருது வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது...