'பாகுபலி 2' படத்தின் இசை வெளியீட்டு தேதி

  • IndiaGlitz, [Saturday,March 18 2017]

இந்தியாவின் மிகப் பிரமாண்டமான திரைப்படங்களில் ஒன்றாகிய 'பாகுபலி 2' படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்பது அந்த படத்தின் டிரைலருக்கு கிடைத்த வெற்றியின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 'பாகுபலி 2' டிரைலரை ஒரே நாளில் 50 மில்லியன் பேர் பார்த்துள்ளது ஒரு மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது

இந்நிலையில் இந்த படத்தின் தமிழ்ப்பதிப்பின் இசை வெளியீட்டு விழா வரும் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த விழாவினை மிக பிரமாண்டமாக நடத்தவும் கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களை அழைக்கவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

முதல் பாகத்திற்கு இசையமைத்த எம்.எம்.கீரவானி, 'பாகுபலி 2' படத்திற்கு இசையமைத்துள்ளார். முதல் பாகத்தில் சின்ன சின்ன பாடல்களுடன் சேர்த்து 8 பாடல்களை அவர் கம்போஸ் செய்திருந்த நிலையில் இந்த படத்தில் எத்தனை பாடல்கள் உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

இந்நிலையில் பாகுபலி 2' படத்தின் டிரைலருக்கு கிடைத்த வெற்றிக்கும், டிரைலரை பாராட்டிய பிரபலங்களுக்கும் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி தனது சமூக வலைத்தளத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

More News

சமந்தா-நாகசைதன்யா ஜோடி சேர வாய்ப்பில்லை. வதந்திக்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளி

பிரபல நடிகை சமந்தாவும், பிரபல நடிகர் நாக சைதன்யாவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருவதும் விரைவில் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

ஒரே மாதத்தில் உடைந்தது தீபா கட்சி. தனிக்கட்சி ஆரம்பிக்கின்றார் கணவர்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, சமீபத்தில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினார்

ஆர்.கே.நகரில் கங்கை அமரன் போட்டி. அதிகாரபூர்வ அறிவிப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் வரும் ஏப்ரம் 12-ல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் அரசியல் கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில் தேசிய கட்சியான பாரதிய ஜனதாவும் தற்போது வேட்பாளரை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் ஆணையத்தின் இறுதி முடிவு தேதி அறிவிப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை அதிமுக ஒன்றுபட்டு இருந்தது. ஆனால் அவருடைய மறைவிற்கு பின்னர் ஒருசில மாதங்களில் அதிமுக, சசிகலா அணி மற்றும் ஓபிஎஸ் அணி என இரண்டாக உடைந்தது...

சிறையில் தள்ளிவிடுவேன். ஜெ. மகன் என்று கூறி வழக்கு போட்ட நபருக்கு நீதிபதி எச்சரிக்கை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் அவரது ஆன்மாவை கூட நிம்மதியாக இருக்கவிடாமல் திடீர் திடீரென ஆளாளுக்கு தோன்றி நான் ஜெயலலிதாவின் மகன், நான் ஜெயலலிதாவின் மகள் என்று கூறி வருகின்றனர். மறைந்த முதல்வருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் செயல்படும் போலியான நபர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக &