நயன்தாரா பட நடிகையின் 'வாத்தி கம்மிங்' வெர்ஷன்!

  • IndiaGlitz, [Thursday,May 14 2020]

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாக வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென மார்ச் மாதமே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மாஸ்டர் திரைப்படம் ஜூலை மாதம் ரிலீஸ் ஆகலாம் என்றும் தீபாவளிக்கு தான் இந்த படம் ரிலீசாகும் என்றும் பல்வேறு வகையான செய்திகள் கோலிவுட்டில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் ’மாஸ்டர்’ திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகிறதோ தெரியவில்லை. ஆனால் இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டாகி உள்ளது. குறிப்பாக வாத்தி கம்மிங் பாடல் பட்டிதொட்டி எங்கும் பரவி உள்ளது. இந்த பாடலுக்கு பல திரையுலக நட்சத்திரங்களும் நடனமாடியது குறித்த வீடியோக்களை தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’இமைக்கா நொடிகள்’ என்ற படத்தில் அவருடைய மகளாக நடித்த பேபி நடிகை மானஸ்வி தனது சமூக வலைப்பக்கத்தில் ’மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற ’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடிய வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.