3 DNA களுடன் பிறந்த அதிசய குழந்தை… இதுவும் சாத்தியமா?

  • IndiaGlitz, [Wednesday,May 10 2023]

பிறக்கும் குழந்தைகள் பொதுவாக தாய், தந்தை இருவரின் மரபணுவைக் கொண்டு பிறக்கும். ஆனால் 3 மரபணுக்களைக் கொண்டு இங்கிலாந்தில் ஒரு குழந்தை பிறந்துள்ளது. இது இயற்கையாக நடக்காமல் புதிய மருத்துவச் சட்டத்தின் அடிப்படையில் செயற்கையாக பிறக்க வைக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் தாய், தந்தையரைத் தவிர்த்து மூன்றாவது நபராக மற்றொரு பெண்ணின் கருமுட்டையில் இருக்கும் மைட்டோகாண்ட்ரியா எனும் ஒரு அம்சத்தை மட்டும் நன்கொடையாகப் பெற்று குழந்தையைப் பெற்றுக்கொள்ளும் சட்டமானது கடந்த 2015 ஆம் ஆண்டில் அமலுக்கு வந்திருக்கிறது. இந்த அடிப்படையில் தற்போது முதல் முறையாக இங்கிலாந்தில் 3 டிஎன்ஏ- களுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது. இதற்கு முன்பு 2016 இல் அமெரிக்காவில் ஜோர்டானிய வம்ச குடும்பத்தில் ஒரு குழந்தை பிறந்ததாகவும் உலகம் முழுக்க 5 குழந்தைகள் மட்டுமே இப்படி பிறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதில் சாதாரணமாக 2 டிஎன்ஏக்களுடன் பிறக்கும் குழந்தையானது 3 ஆவதாக மற்றொரு நபரின் டிஎன்ஏவையும் பெற்று பிறக்கும். மேலும் இப்படி பிறக்கும் குழந்தைகள் அந்த 3 டிஎன்ஏக்களுடன் அடுத்த தலைமுறைக்கும் வழிவழியாக தங்களது ஒட்டுமொத்த பரம்பரைக்கும் கடத்தப்படும் என்பதுதான் இங்கு பெரிய ஆச்சர்யமாக இருக்கிறது.

மைட்டோகாண்ட்ரியா மருத்துவமுறை

மைட்டோகாண்ட்ரியா என்பது ஒவ்வொரு செல்லிலும் உள்ள சிறிய பகுதி என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் உணவை ஆற்றலாக மாற்றும் வேலையை இதுதான் செய்கிறது. பொதுவாக தாயிடம் இருந்துதான் இந்த மைட்டோகாண்ட்ரியா குழந்தைக்கு கடத்தப்படுகிறது.

ஆனால் இந்த மைட்டோகாண்ட்ரியாவை சரியாகப் பெறாத குழந்தைகள் நோய்த் தாக்கம் ஏற்பட்டு பெரும்பாலான சமயங்களில் இறந்து போகின்றனர். மேலும் இந்தக் குறைபாடுள்ள குழந்தைகளால் உடலுக்குத் தேவையான சக்தியைப் பெற முடிவதில்லை. சில சமயங்களில் மூளைச்சேதம், தசைச்சிதைவு, இதயச் செயலிழப்பு , பார்வையிழப்பு போன்ற குறைபாடுகளும் ஏற்படுகின்றன. இதுபோன்ற குறைப்பாட்டை தவிர்ப்பதற்காகவே தற்போது கருத்தரிப்பின்போது மூன்றாவது நபராக மற்றொரு பெண்ணின் கருமுட்டையில் இருந்து மைட்டோகாண்ட்ரியா நன்கொடையாகப் பெறப்பட்டு குழந்தை பிறக்க வைக்கப்படுகிறது.

இதுகுறித்து பேசியுள்ள மருத்துவர்கள் 3 ஆவது நபரின் கருமுட்டையில் இருந்து மைட்டோகாண்ட்ரியா மட்டுமே நன்கொடையாகப் பெறப்படும். மற்றபடி பிறக்கும் குழந்தையானது தாய் தந்தையரின் குணநலன் மற்றும் உடலமைப்பையே கொணடிருக்கும் என்றும் கூறியுள்ளனர். என்னதான் புதிய கண்டுபிடிப்பாக இருந்தாலும் 3 டிஎன்ஏ குழந்தை பற்றிய தகவல் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகிறது.

More News

ஆஸ்கர் நாயகர்கள் பொம்மன்- பெள்ளியை சந்தித்த தோனி… என்ன பரிசு கொடுத்தார் தெரியுமா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனியை ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்‘ ஆவணப்படத்தில் நடித்து ஆஸ்கர் வி

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’: ஒரே நேரத்தில் வெளியான இரண்டு சூப்பர் அப்டேட்..!

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’கேப்டன் மில்லர்’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

பார்க், பீச், சினிமா தியேட்டர்.. இப்ப மெட்ரோ ரயிலிலும்.. வைரலாகும் வீடியோ..!

காதலர்கள் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துக் கொள்வதும் மடியில் படுத்து ரொமான்ஸ் செய்வதும் பார்க்,

சுந்தர் சியின் ‘தலைநகரம் 2’ ரிலீஸ் எப்போது? படக்குழு வெளியிட்ட மாஸ் தகவல்..!

சுந்தர் சி நடித்த தலைநகரம் என்ற திரைப்படம் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான நிலையில் 17 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக படப்பிடிப்பும் நடந்து வந்தது

பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை: விஜய்யின் புதிய உத்தரவு..!

தளபதி விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்