close
Choose your channels

ஜிவி பிரகாஷ் அடுத்த படத்தின் இளமையான டைட்டில்!

Wednesday, September 11, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜிவி பிரகாஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அவர் நடித்து முடித்துள்ள நான்கு திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்று அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது

ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் தயாரிப்பில் சதீஷ் செல்வகுமார் இயக்கும் புதிய படம் ஒன்றில் ஜிவி பிரகாஷ் நடிக்கவுள்ளார் என்பதையும் இந்த படத்தின் நாயகியாக திவ்யபாரதி என்ற மாடல் நடிக்கவுள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் ‘பேச்சுலர்’ என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த படம் குறித்து ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில், ‘பெருங்கூட்டத்துக்கு மத்தியில் உன் சிறு உரையாடல் கேட்டுக் கொண்டே இருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில், சான் லோகேஷ் படத்தொகுப்பில் ஜிவி பிரகாஷ் இசையில், குமார் கங்கப்பன் கலை இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.