லண்டன் ராயல் ஆல்பர்ட் ஹாலில் திரையிடப்பட்ட ஒரே இந்திய படம்

  • IndiaGlitz, [Sunday,October 20 2019]

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா நடிப்பில் எம்.எம்.கீரவாணி இசையில் உருவான பாகுபலி’ திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

ரூ.250 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்த படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1800 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் பல விருதுகளையும் பல பெருமைகளையும் பெற்ற நிலையில் நேற்று லண்டனில் உள்ள ராயல் ஆல்பர்ட் ஹாலில் திரையிடப்பட்டது.

5267 இருக்கைகள் கொண்ட இந்த மாபெரும் ஹாலில் திரையிடப்பட்ட ஒரே இந்திய படம் மட்டுமின்றி ஆங்கிலம் அல்லாத வேறொரு மொழி திரையிடப்படுவதும் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

லண்டனில் உள்ள ஆல்பர்ட் ராயல் ஹாலில் ‘பாகுபலி’ திரையிடப்படுவதை அடுத்து இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி, பிரபாஸ், அனுஷ்கா, ராணா உள்ளிட்டோர் லண்டன் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

எடப்பாடி அரசு கவிழ்ந்த அடுத்த நாள் ரஜினியின் கட்சி: தமிழருவி மணியன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் கட்சி தொடங்குவார் என்றும் அவர் கட்சி ஆரம்பிப்பதற்கான 90 சதவீத பணிகளை முடித்து விட்டார் என்றும் கடந்த பல மாதங்களுக்கு முன்னரே கூறப்பட்டது 

விஜயகாந்துடன் பிரச்சாரத்திற்கு சென்ற தேமுதிக நிர்வாகி பரிதாப பலி!

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய 2 தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் சற்றுமுன் முடிவடைந்தது. இந்த நிலையில் இன்றுடன் பிரச்சாரம் முடிவடைய உள்ள

மீண்டும் உயிர்ப்பெறும் 'மாநாடு': சிம்பு ரசிகர்கள் உற்சாகம்

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 'மாநாடு' என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

24 மணி நேரத்தில் 3 மில்லியன்: தல ரசிகர்களின் கட்டுப்பாட்டில் டுவிட்டர்

அஜித் நடித்த 'நேர்கொண்டபார்வை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து அவர் நடிக்க இருக்கும் 60வது திரைப்படத்தின் பூஜை நேற்று சென்னையில்

’பிகில்’ படத்தின் ‘அந்த 7 நிமிடம்’: ஆச்சரியப்பட வைக்கும் தகவல்

தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக பெருவாரியான திரையரங்குகளில் வெளியாக உள்ளது.