பாதியாக குறைந்தது பொங்கல் படங்கள்

  • IndiaGlitz, [Thursday,January 05 2017]

இந்த ஆண்டு பொங்கல் தினத்தில் சுமார் எட்டு படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இளையதளபதி விஜய்யின் 'பைரவா', ஜி.வி.பிரகாஷின் 'புரூஸ் லீ', கலையரசனின் 'அதே கண்கள்', அருண்விஜய்யின் 'குற்றம் 23', கிருஷ்ணாவின் 'யாக்கை', ஜெய் நடித்த 'எனக்கு வாய்த்த அடிமைகள்', விஜய்சேதுபதியின் 'புரியாத புதிர்' மற்றும் பார்த்திபனின் 'கோடிட்ட இடங்களை நிரப்புக' ஆகிய படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டன.

ஆனால் பொங்கல் தினம் நெருங்க நெருங்க ஒவ்வொரு படமாக விலகி தற்போது நான்கு படங்கள் பொங்கல் திருநாளில் வெளியாகவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவை 'பைரவா', 'புரூஸ்லீ, புரியாத புதிர்', மற்றும் 'கோடிட்ட இடங்களை நிரப்புக' ஆகிய படங்கள்.

இவற்றில் 'பைரவா' ஜனவரி 12ஆம் தேதியும், புரூஸ்லீ, புரியாத புதிர் ஆகிய படங்கள் ஜனவரி 13ஆம் தேதியும், கோடிட்ட இடங்களை நிரப்புக படம் ஜனவரி 14ஆம் தேதியும் வெளியாகவுள்ளன.

மேலும் தமிழகத்தில் சுமார் 400 முதல் 500 திரையரங்குகளில் 'பைரவா' படமும் மீதியுள்ள சுமார் 350 திரையரங்குகளில் மற்ற திரைப்படங்களும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

More News

த்ரிஷாவுக்காக பாட்டு பாடிய பிரபல நடிகை

கோலிவுட் திரையுலகில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக இருந்து வரும் த்ரிஷா...

இரண்டு சசிகலாவுக்கும் என்ன வித்தியாசம். நாஞ்சில் சம்பத் பேட்டி

ஜெயலலிதா மறைவை அடுத்து அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாதான் பொறுப்பேற்க வேண்டும் என்று கிட்டத்தட்ட அனைத்து அதிமுக தலைவர்களும் ...

சூர்யாவின் 'எஸ் 3' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்

சூர்யா நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கியுள்ள 'எஸ் 3' திரைப்படம் இம்மாதம் 26ஆம் தேதி வெளிவரவுள்ளது...

ஜனவரி ரேஸில் இணையும் த்ரிஷா படம்

தமிழ் திரையுலகில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கும் நடிகைகள் நயன்தாராவும் த்ரிஷாவும் மட்டுமே...