close
Choose your channels

6,000 திரையரங்குகளில் மீண்டும் ரிலீஸ் ஆகிறது 'பாஜிராவ் மஸ்தானி

Tuesday, December 22, 2015 • தமிழ் Comments

ரன்வீர்கபூர், தீபிகா படுகோனே, ப்ரியங்கா சோப்ரா நடித்த 'பாஜிராவ் மஸ்தானி' கடந்த வெள்ளியன்று இந்தியா முழுவதும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கின்றது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட அனைத்து மொழிகளிலும் நல்ல விமர்சனங்களை இந்த படம் பெற்றுள்ளதோடு திருப்தியான வசூலையும் பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படம் தற்போது சீனமொழியில் டப் செய்யப்பட்டு வருகிறது. சீனமொழி டப்பிங் பணி முடிவடைந்ததும் சீனாவில் சுமார் 6,000 திரையரங்குகளில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே அமிர்கானின் 'பிகே' சீனாவில் பெரும் வரவேற்பை பெற்றது. எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'பாகுபலி' திரைப்படமும் விரைவில் சீன, ஜப்பானிய மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் 'பாஜிராவ் மஸ்தானி' திரைப்படமும் சீனாவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Get Breaking News Alerts From IndiaGlitz