பாலாவின் 'நாச்சியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,January 10 2018]

தேசியவிருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கி வந்த 'நாச்சியார்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி அதில் ஜோதிகா பேசிய ஒரு குறிப்பிட்ட வசனம் பெரும் சர்ச்சைக்குள்ளாகியது. இந்த நிலையில் இந்த படம் வரும் பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜோதிகா, ஜிவி பிரகாஷ், ராக்லைன் வெங்கடேஷ் உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். ஈஸ்வர் ஒளிப்பதிவில், சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை பாலாவின் 'B ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

பொங்கல் தினத்தில் வெளியாகும் படங்கள் எத்தனை?

இந்த ஆண்டு பொங்கல் தினத்தில் சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' விக்ரமின் ஸ்கெட்ச், அரவிந்தசாமியின் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்', பிரபுதேவாவின் 'குலேபகாவலி',

நாம் செய்யும் முதல் தவறு இதுதான்: மாணவர்களுக்கு சிவகார்த்திகேயன் அறிவுரை

கோவையில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கான உடல்பருமன் தடுப்புத் திட்டம் குறித்த விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி நடந்தது.

சிங்கம் சிங்கிளாத்தான் வரும்: ரஜினியின் அரசியலுக்கு ஜப்பான் ரசிகர்கள் ஆதரவு

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'முத்து' படத்தில் இருந்து அவர் நடித்த அனைத்து படங்களும் ஜப்பானில் ஹிட்டானது என்பது அனைவரும் அறிந்ததே. தமிழகத்தை போலவே அவருக்கு ஜப்பானிலும் ரசிகர் மன்றம் தோன்றியது.

பிக்பாஸ் ஜூலியின் முதல் பட ரிலீஸ் திடீர் தள்ளிவைப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பங்கேற்பாளர்களான ஓவியாவுக்கு பாசிட்டிவ் புகழ் கிடைத்த நிலையில் அதே நிகழ்ச்சியின் இன்னொரு பங்கேற்பாளரான ஜூலிக்கு நெகட்டிவ் புகழ் கிடைத்தது.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐஸ்வர்யா ராஜேஷ்!

தமிழ் திரையுலகில் வெகு அரிதாகவே சென்னை பெண்கள் பிரபலமாகி வரும் நிலையில் அவர்களில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்