பாலாவின் அடுத்த படத்தில் 5 முன்னணி நடிகர்கள்

  • IndiaGlitz, [Tuesday,November 17 2015]

தேசியவிருது பெற்ற இயக்குனர் பாலாவின் 'தாரை தப்பட்டை' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தன்று வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் பாலாவின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

முதல்முறையாக பாலா, ஐந்து கதாநாயகர்களை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் ஆர்யா, விஷால், அரவிந்தசாமி, அதர்வா மற்றும் ராணா ஆகியோர் நடிக்கவுள்ளனர்.
இந்த படம் பிரமாண்டமான முறையில் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஆர்யா, விஷால், அதர்வா ஆகியோர் பாலாவின் இயக்கத்தில் நடித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அவரது படத்தில் நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரியில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் 'தனி ஒருவன்' படத்தின் மூலம் அட்டகாசமான வில்லனாக ரீ-எண்ட்ரி ஆன அரவிந்தசாமி, இந்த படத்திலும் வில்லனாக நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

விஜய் 59' படம் குறித்த புதிய தகவல்கள்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் சென்னை படப்பிடிப்பு தற்போது முடிவடைந்த நிலையில் விரைவில் படக்குழுவினர்...

நயன்தாராவின் திருநாளில் இணையும் கோபிநாத்

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் 'நீயா நானா' என்ற நிகழ்ச்சியை நடத்தி வரும் கோபிநாத், திரையுலகிற்கு புதியவர் இல்லை...

'ரஜினிமுருகன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த 'ரஜினிமுருகன்' திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதமே ரிலீஸுக்கு தயாராகிவிட்டபோதிலும் ...

முதலமைச்சர்-நடிகர் சங்க நிர்வாகிகள் சந்திப்பில் நடந்தது என்ன?

தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களை நடிகர்சங்கத்தின் நிர்வாகிகள் இன்று சந்தித்து வெள்ள நிவாரண நிதியளிக்க உள்ளதாக காலையில் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். ..

'விஜய் 59' படத்தின் புதிய டைட்டில்?

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்...