பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலசந்தர் பட நடிகர்! பரபரப்பு தகவல்

கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று தொடங்கவுள்ள நிலையில் சற்று முன்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாள் புரமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்களை ஏற்கனவே பார்த்தோம். அந்த வகையில் நடிகர் சுரேஷ் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக செய்திகள் வெளியானது.

பெரும்பாலானோர் நடிகை நதியாவுடன் பல படங்களில் நடித்த நடிகர் சுரேஷ் தான் போட்டியாளர் என்று நினைத்திருந்த நிலையில் தற்போது கே பாலச்சந்தர் இயக்கிய ’அழகன்’ திரைப்படத்தில் நடித்த சுரேஷ் சக்கரவர்த்தான் பிக்பாஸ் போட்டியாளர் என்பது தெரியவந்துள்ளது.

கோலிவுட் திரையுலகில் ஒருசில திரைப்படங்களில் நடித்த சுரேஷ் கடந்த 80கள் மற்றும் 90களில் நடித்த நடிகர் நடிகைகளிடம் நெருக்கமான நட்பை கொண்டுள்ளார். இவர் தற்போது ஆஸ்திரேலியாவில் ரெஸ்டாரன்ட் நடத்திவருகிறார் என்பதும், இவர் ஒரு சிறந்த சமையல் கலைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

புதிய வாழ்க்கை புதிய யதார்த்தம் புதிய துவக்கம்: பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் புரமோ!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று மாலை 6 மணி முதல் விஜய் டிவியில் தொடங்க உள்ளது. இன்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் அறிமுகம் செய்யப்படுவார்கள்

16 வயசுல எல்லாத்தையும் பாத்துட்டேன்: பிரபல நடிகையின் பரபரப்பு பேட்டி 

தமிழ் சினிமாவின் குணச்சித்திர மற்றும் கவர்ச்சி நடிகையாக கடந்த 90ஆம் ஆண்டுகளில் வலம் வந்தவர் நடிகை விசித்ரா. கடந்த 1992ஆம் ஆண்டு வெளிவந்த 'தலைவாசல்' திரைப்படத்தில் இவர் நடித்த 'மடிப்பு ஹம்சா' என்ற

மேட்ச் பிக்சிங்: ஐபிஎல் அணி வீரரை அணுகிய நபர் யார்?

பொதுவாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் போது மேட்ச் பிக்சிங் நடப்பது சர்வ சாதாரணமாக இருந்து வருகிறது என்பதும் குறிப்பாக ஐபிஎல் போட்டியின்போது கடந்த காலங்களில் அதிக அளவில் மேட்ச் பிக்சிங் நடந்து உள்ளது

செப்டம்பரில்தான் ரிஓபன்… ஒரே பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த 770 பேருக்கு கொரோனா!!!

கொரோனா ஊரடங்கிற்குப் பின்பு செப்டம்பர் மாத நடுவில் இங்கிலாந்தின் பல பல்கலைக் கழகங்கள் மீண்டும் திறக்கப்பட்டன.

உணவு கடைகளாக மாறும் பழைய பேருந்துகள்: அரசின் அசத்தல் திட்டம்

15 வருடத்திற்கு மேலான பழைய பேருந்துகளை உணவு கடைகளாக மாற்றும் திட்டம் ஒன்றை கேரள அரசு கொண்டுவந்துள்ளது