close
Choose your channels

ஷிவானி பிறந்தநாள் விழாவில் பாலாஜி செய்த வேலையை பாருங்க: வைரல் புகைப்படங்கள்

Wednesday, May 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான ஷிவானி நாராயணன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு சின்னத் திரை உலகினர் மற்றும் பிக்பாஸ் சக போட்டியாளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

மேலும் அவரை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்யும் மில்லியன்கணக்கான ஃபாலோயர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி சமூக வலைதளங்களில் ஷிவானி நாராயணன் பிறந்தநாள் குறித்த காமன் டிபி போஸ்டர்கள் வெளியாகி வைரலாகி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஷிவானி நாராயணன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிக்பாஸ் பாலாஜி கலந்து கொண்டுள்ளார். அவர் ஷிவானி நாராயணனுக்கு பிறந்த நாள் கேக் ஊட்டும் புகைப்படம், மற்றும் ஷிவானி உடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் ஆகியவை தற்போது வைரலாகி வருகிறது. ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது ஷிவானியும் பாலாஜியும் நெருக்கமாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.