close
Choose your channels

இவர்தான் நாம தேடிக்கிட்டு இருந்தவர்: பிக்பாஸ் பாலாஜி வெளியிட்ட புகைப்படம்!

Monday, January 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இவர் தான் நாம தேடிக் கொண்டிருந்தவர் என்று பிக்பாஸ் பாலாஜி வெளியிட்ட புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய வகையில் நடந்து கொண்டாலும் அந்த நிகழ்ச்சி சுவராசியமாக செல்வதற்கு பாலாஜி முருகதாஸ் ஒரு முக்கிய காரணம் என்பதும் அதனால் தான் அவர் மக்களால் அந்த நிகழ்ச்சியின் ரன்னராக தேர்வு பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆரியுடன் அடிக்கடி சண்டை போடுவதும் அவரிடம் மன்னிப்புக் கேட்பதையே கிட்டத்தட்ட பாதி நாட்களில் அவர் ஈடுபட்டிருந்தார் என்றாலும் அவரது தனித்திறமையும் பல்வேறு இடங்களில் வெளிப்பட்டது என்பதும் எந்த நேரத்தில் அவர் நடிக்காமல் இயல்பாக விளையாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பாலாஜி முருகதாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் எடிட்டர் இவர் தான் என்று கூறிய பாலாஜி, ‘இவர் தான் நாம் தேடிக் கொண்டிருந்த எடிட்டர். இல்லாத ஒன்றுக்கு பிஜிஎம் போட்டவர்’ என்று காமெடியாக கூறியுள்ளார்

இதனை அடுத்து எடிட்டரின் மைண்ட் வாய்ஸ் என, ‘ராசா எங்களுக்கு கண்டெண்ட் கொடுத்த தெய்வமே, பிக்பாஸ் நிகழ்ச்சியை தூக்கி நிறுத்திய சிங்கமே, நீ இல்லைன்னா நாங்க இல்லை’ என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது

பாலாஜியின் காமெடியான இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.