9 வருடங்களுக்கு பிறகு மீண்டும் படம்...! காதல் பட இயக்குனரின் அடுத்த அப்டேட்....!

  • IndiaGlitz, [Wednesday,August 04 2021]

இயக்குனர் பாலாஜி சக்திவேல் அவர்களின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

தமிழில் பிரபலமான இயக்குனர்களுள் பாலாஜி சக்திவேலும் ஒருவர். சந்தியா, பரத் நடிப்பில் இவரது இயக்கத்தில் வெளியான காதல் திரைப்படம் பிரமாண்ட ஹிட். கமர்ஷியலாக வந்து கொண்டிருந்த படங்களுக்கு மத்தியில், இப்படம் எதார்த்த காதல் வாழ்க்கையை எடுத்து கூறியிருந்தது. இதே போல் இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் வழக்கு என் 18/9. இப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இதற்கிடையில் யார் இவர்கள், ர ர ராஜசேகர் என்ற இரு படங்களை எடுப்பதாக அறிவித்ததோடு சரி, இதைப்பற்றி பின்பு எந்த தகவலும் வெளிவரவில்லை. இந்நிலையில் கிட்டத்தட்ட 9 வருடங்களுக்கு பிறகு பாலாஜி சக்திவேல் நான் நீ நாம் என்ற படத்தை இயக்குகிறார். இதில் வீரா, சாந்தினி உள்ளிட்ட நடிகர்கள் நடிக்க, ஒளிப்பதிவாளர் சுரேஷ் குமார் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். ஜாவித் ரியாஸ் இப்படத்திற்கு இசையமைக்க யுகபாரதி மற்றும் லலிதானந்த் உள்ளிட்ட பாடலாசிரியர்கள் பாடல்களை எழுதுகிறார்கள். ப்ளூமூன் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

More News

அதிகரிகக்கும் கொரோனா… கோவில் வழிபாடுகளில் மீண்டும் கட்டுப்பாடுகள்!

கொரோனா பரவல் அதிகரித்து இருக்கும் சில மாவட்டங்களில் தற்போது கோவில் வழிபாட்டிற்கு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டு இருக்கிறது.

தனுஷின் அடுத்த படத்தில் பழம்பெரும் இயக்குனர்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

தனுஷ் நடித்து வரும் 43வது திரைப்படமான 'மாறன்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் விரைவில் அவரது 44-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது 

எளிதில் உடல்எடையை குறைக்கும் ஆண்கள்… பெண்களால் ஏன் முடிவதில்லை? 

உடல்பருமன் என்பது இன்றையக் காலக்கட்டத்தைப் பொறுத்த வரைக்கும் பெரும் சிக்கலாக உருவெடுத்து இருக்கிறது.

2021ல் டிகிரி முடித்திருந்தால் வேலை கிடையாதா? அதிர்ச்சி தகவல்

2021 ஆம் ஆண்டு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் என தனியார் வங்கி ஒன்றின் வேலை வாய்ப்பு விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பறையிசையில் பட்டையை கிளப்பிய நடிகை ரோஜா: வைரல் வீடியோ

தமிழ் திரையுலகில் கடந்த 90கள் மற்றும் 2000களில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ரோஜா, தற்போது ஆந்திர மாநிலத்தில் நகரி தொகுதியில் எம்எல்ஏவாக இருக்கிறார் என்பது தெரிந்ததே.