ஜமியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தை அறிவித்த பனாரஸ் இந்து கல்லூரி மற்றும் பல கல்லூரிகள்..!

 

புதிய குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் அத்துமீறி நடத்திய தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜமியா பல்கலைக்கழக வன்முறையை கண்டித்து அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போதும் வன்முறை ஏற்பட்டது. அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் பேரணியாக செல்ல முயன்ற போது, அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால், இந்த வன்முறை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஜதராபாத் மொளானா ஆசாத் உருது பல்கலைக்கழக மாணவர்களும், பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்களும் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, டெல்லி தலைமை காவல்நிலையத்தை முற்றுகையிட்டு நூற்றுக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களின் அணிவகுப்பின் போது போலீசார் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுக்க துவங்கியது.

வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர கண்ணீர் புகைக்குண்டுகளை பயன்படுத்திய காவல்துறையினர் பின்னர் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து சுமார் நூற்றுக்கணக்காண மாணவர்களை கைது செய்தனர். தொடர்ந்து, கைது செய்யப்பட்ட மாணவர்கள் அதிகாலை 3.30 மணி அளவில் விடுவிக்கப்பட்டனர்.

மாணவர்களின் இந்த ஆர்ப்பாட்ட அணிவகுப்பானது, ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்திலிருந்து தொடங்கி ஜந்தர் மந்தரில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விரைவில் வன்முறை தொடங்கியது. தொலைக்காட்சி கேமராக்களின் முழு பார்வையில், கும்பல் போலீசாருடன் மோதியது. பேருந்துகள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைத்தது. இதில், மாணவர்களைத் தவிர, மூத்த அதிகாரிகள் உட்பட பல போலீசார் காயமடைந்தனர்.

இதுதொடர்பாக பல்கலைக்கழக தலைமை பேராசிரியர் வசீம் அகமது கான் கூறும்போது, காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வளாகத்திற்குள் நுழைந்துள்ளனர். அவர்களுக்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. எங்கள் ஊழியர்களும், மாணவர்களும் தாக்கப்பட்டு வளாகத்தை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்படுகிறார் என்று கூறினார்.

இதுதொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரி சின்மயா பிஸ்வால் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில், வன்முறைக் கும்பல் உள்ளே சென்று கற்களை வீசத் தொடங்கிய பின்னரே காவல்துறையினர் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்தனர். இந்த வன்முறை நடவடிக்கைகள் நடைபெற யார் காரணம் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

நடந்த இந்த வன்முறைக்கு ஜாமியா வன்முறைக்கு தாங்கள் காரணமில்லை என்றும், டெல்லி காவல்துறையை சேர்ந்த சில அதிகாரிகளும், உள்ளூர் குண்டர்களுமே இந்த வன்முறைக்கு காரணம் என்று மாணவர்கள் கூறுகின்றனர். மேலும், எங்களது ஆர்ப்பாட்டம் அமைதி வழியிலே நடைபெறும் என்றும் வன்முறையற்றது என்பதை நாங்கள் தெளிவாக தெரிவித்து வருகிறோம் என்று கூறியுள்ளனர்.

இதனிடையே, பல்கலைக்கழகம் அமைந்துள்ள நகரின் மெஜந்தா வரிசையில் 5 மெட்ரோ ரயில் நிலையங்களில் சேவை முடக்கப்பட்டது. சாலைப் போக்குவரத்தும் அப்பகுதியில் இருந்து திருப்பி விடப்பட்டது. ஜாமியா, ஓக்லா, நியூ பிரண்ட்ஸ் காலனி, மதான்பூர் காதர் உள்ளிட்ட டெல்லியின் தென்கிழக்கு மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளும் திங்கள்கிழமை இன்று விடுமுறை அறிவித்துள்ளதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ட்வீட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்வீட்டர் பதிவில், மாணவர்கள் மீதான வன்முறையை கடுமையாக கண்டித்துள்ளார். மேலும், இதுதொடர்பாக எல்.ஜியிடம் பேசயதாகவும், இயல்பு மற்றும் அமைதி நிலையை மீட்டெடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அவரை வலியுறித்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, மற்றொரு ட்வீட்டர் பதிவில், எங்களால், முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்து வருகிறோம். வன்முறைக்கு காரணமான உண்மையான குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று அதில் தெரிவித்திருந்தார்.

More News

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கொல்கத்தாவில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் மாபெரும் பேரணி..!

குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டது போல் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பேரணியில் ஈடுபட்டுள்ளார்

ஏ.ஆர்.ரஹ்மானின் முதல் அனுபவம்: வைரலாகும் வீடியோ!

இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அவர்கள் தனது இசைத் திறமையால் உலகம் முழுவதும் புகழ் பெற்றவர் என்பதும் இசைக்காக ஆஸ்கார் விருது வாங்கிய ஒரே இந்தியர் என்பதும் தெரிந்ததே

'பேட்ட' ரஜினிகாந்த் கெட்டபுக்கு திடீரென மாறிய தனுஷ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'பேட்ட' திரைப்படத்தில் இடம்பெற்ற பிளாஷ்பேக் காட்சிகளில் ரஜினியின் இளமை தோற்றத்துடன் முறுக்கு மீசையுடன் தோன்றுவார்

பிரபல தமிழ் பாடகரின் மகள் திடீர் மாயம்: போலீசில் புகார்

பிரபல தமிழ் திரைப்பட மற்றும் கிராமியப் பாடல்களை பாடும் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி என்பது தெரிந்ததே. இவருடைய மனைவியும் ஒரு பாடகியாவார். இருவரும் இணைந்து பல

இங்கேதான் பிறந்தேன்... 25 ஆண்டுகளாக இருக்கிறேன்... குடியுரிமை கேள்விக்குறியானதால் கருணைக் கொலை செய்ய இளைஞர் மனு.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் பவளத்தானூர் எரி அருகே உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர் யனதன் என்ற பட்டதாரி வாலிபர்