பெங்களூர் டேய்ஸ் ரீமேக் படத்தின் டைட்டிலுக்கு சிக்கலா?

  • IndiaGlitz, [Monday,July 13 2015]

மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படத்தின் ரீமேக்கான 'பாபநாசம்' வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது போல், இன்னொரு சூப்பர் ஹிட் மலையாள படமான பெங்களூர் டேய்ஸ்' படத்தின் ரீமேக் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆர்யா, ஸ்ரீதிவ்யா, பாபிசிம்ஹா, ராணா, பார்வதி, ராய்லட்சுமி மற்றும் சிறப்பு தோற்றத்தில் நயன்தாரா நடிக்கும் இந்த படத்திற்கு 'ADMK' என்று வைத்துள்ளனர்.

அர்ஜூன், திவ்யா மற்றும் கார்த்திக் என்ற பொருள்பட சுருக்கமாக 'ADMK' என்ற டைட்டிலை இந்த படத்திற்கு படக்குழுவினர் வைத்திருந்தபோதிலும், இதே பெயரில் தமிழகத்தில் அரசியல் ஒன்று இயங்கி வருவதால், அந்த கட்சியின் தலைமையிடம் படக்குழுவினர் டைட்டிலுக்கு அனுமதி கேட்டுள்ளதாகவும், அனுமதி கிடைத்ததும் படத்தின் டைட்டில் உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. ஒருவேளை அனுமதி கிடைக்காவிட்டால், மாற்று டைட்டிலை வைக்கவும், படக்குழுவினர் ஆலோசனை செய்து வருகின்றனர்.

பிரபல தெலுங்கு பட இயக்குனர் பாஸ்கர் இயக்கி வரும் இந்த படத்திற்கு கோபிசுந்தர் இசையமைத்து வருகிறார். இவர் ஒரிஜினல் படமான பெங்களூர் டேய்ஸ் படத்திற்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கே.வி.குஹன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை பிவிபி நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.