திருமணத்தால் சர்ச்சை… சிறை தண்டனையை எதிர்நோக்கும் பங்களாதேஷ் வீரர்!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரரான நசீர் ஹொசைன் சட்டத்திற்குப் புறம்பாகத் திருமணம் செய்துகொண்டார் என திடீர் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு நசீருக்கு எதிராகத் திரும்பினால் அவருக்கு 7 வருடம் சிறை தண்டனை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராக இருந்துவரும் நசீர் ஹொசைன் இதுவரை 19டெஸ்ட் போட்டி, 65 ஒருநாள் போட்டி மற்றும் 31 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்நிலையில் 30 வயதான இவர் தற்போது சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொள்ளாமல் இருந்துவருகிறார். இதையடுத்து கடந்த 2021 இல் தமிமா சுல்தானா எனும் விமானப் பணிப்பெண்ணை அவர் திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணத்தில்தான் தற்போது சர்ச்சை வெடித்துள்ளது.

காரணம் தமிமாவின் முன்னாள் கணவர் ரக்கிப் ஹசன் நான் இன்னும் தமிமாவுடன் உறவில்தான் இருக்கிறேன். என்னுடைய மனைவியை நசீர் சட்டவிரோதமாகத் திருமணம் செய்துகொண்டார் எனப் புகார் அளித்த நிலையில் கிரிக்கெட் வீரர் நசீர் மீது கள்ளத்தொடர்பு பிரிவில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டு உள்ளது.

இந்த விவாகாரம் குறித்துப் பேசிய ரக்கிப்பின் வழக்கறிஞர் தமிமா விவாகரத்துப் பெறாமலேயே போலியான ஆவணங்களை உருவாக்கியுள்ளார் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அடிப்படைவாதம் நிரம்பிய பங்களாதேஷ் நாட்டில் கள்ளத்தொடர்பு, விவாகரத்து போன்ற வழக்குகளில் ஆண்களை மட்டுமே விசாரிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். பெண்களை அவர் விசாரிக்காமலேயே தண்டனை கொடுக்கும் நடைமுறையும் இருந்துவருகிறது. இந்நிலையில் நசீர் மீதான வழக்கு பங்களாதேஷ் நாட்டில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

உயிரைப் பறித்த லாஸா காய்ச்சல்... கொரோனா மாதிரி பாதிப்பை ஏற்படுத்துமா?

வைரஸ் பெருந்தொற்று நோய்களுள் ஒன்றாகக் கருதப்படும் லாஸா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இங்கிலாந்தில் முதல் முறையாக

பூமியைப் போல இன்னொரு கிரகம் கண்டுபிடிப்பு… ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்!

சூரியனுக்கு மிக நெருக்கமாக சுற்றிவரும் ஒரு புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் தற்போது

'எனக்கு இந்த வேலை ரொம்ப முக்கியம்' விமலின் 'விலங்கு' 2வது டிரைலர்!

நடிகர் விமல் நடித்த வெப் தொடர் 'விலங்கு' பிப்ரவரி 18ஆம் தேதி ஜீ ஓடிடியில் வெளியாக உள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். மேலும் இந்தத் தொடரின் முதல் டிரைலர்

பிக்பாஸ் அல்டிமேட்: இந்த வாரம் எலிமினேஷன் ஆனது இந்த போட்டியாளரா?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் முதல் நபராக சுரேஷ் சக்கரவர்த்தி கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே

ரூ.4 கோடிக்கு நடராஜன், ரூ.14 கோடிக்கு தீபக் சஹார்: ஏலம் எடுத்த அணிகள் எது தெரியுமா?

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலம் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த ஏலத்தில் யார்க்கர் கிங் நடராஜன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் ஆகியோர் தலா ரூபாய் 4 கோடி