close
Choose your channels

'பெங்களூர் நாட்கள்' இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

Wednesday, January 20, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆர்யா, பாபி சிம்ஹா, ராணா, ஸ்ரீதிவ்யா, பார்வதி, சமந்தா, ராய்லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்த 'பெங்களூர் நாட்கள்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற 'பெங்களூர் டேய்ஸ்' என்ற படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்த படத்தை பிவிபி நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. 'பெங்களூர் டேய்ஸ்' படத்திற்கு இசையமைத்த கோபிசுந்தர் இசையமைத்து வரும் இந்த படத்தை பாஸ்கர் இயக்கியுள்ளார்.

'பெங்களூர் நாட்கள்' திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு தேதி குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் பாடல்கள் வரும் 23ஆம் தேதி சென்னை சத்யம் திரையரங்கில் வெளிவரவுள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.

ஆர்யா நடித்த சமீபத்திய திரைப்படங்கள் சுமாரான வெற்றியை பெற்று வந்த நிலையில் இந்த படம் அவருக்கு ஒரு திருப்புமுனையை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.