ரணகளத்துக்கு நடுவே இணையத்தில் வைரலாகும் பாரக் ஒபாமா Shot!

 

அடுத்த அமெரிக்க அதிபர் யார் என்பதற்கான ரணகளத்தில் அமெரிக்காவே அல்லாடி வருகிறது. இந்நிலையில் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா கூடைப்பந்தைக் கொண்டு கார்னர் ஷாட் அடிக்கும் ஒரு வீடியோ இணையத்தில் கடும் வைரலாகி இருக்கிறது. இந்த வீடியோவை இதுவரை 16 மில்லியன் மக்கள் பார்த்து இருக்கின்றனர்.

ஜனநாயகக் கட்சியை சார்ந்த அதிபர் வேட்பாளர் ஜோ பிடனுக்கு ஆதரவு தெரிவித்து பாரக் ஒபாமா பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அந்த வகையில் மிச்சிகன் மாகாணத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ஒபமா கலந்து கொண்டு பேசினார். அப்போது பக்கத்தில் உள்ள ஒரு கூடைப்பந்து மைதானத்திற்கும் சென்றிருந்தார். அங்கு ஒரு கூடைப்பந்தை கையில் வாங்கிய ஒபமா அலேக்காக பந்தை வீசி, அழகாக ஒரு கார்னர் ஷாட்டை வீழ்த்தினார். அப்படி எடுக்கப்பட்ட 20 வினாடி வீடியோ அதிபர் தேர்தலுக்கு மத்தியில் கடும் வைரலாகி இருக்கிறது.

மேலும் 59 வயதாகும் ஒபாமா இன்று வரை நல்ல உடல் நிலையுடனும் சுறுசுறுப்புடனும் காட்சி அளிக்கிறார். இதற்காக அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அதிபர் தேர்தலில் ஜோ பிடன் முன்னிலைப் பெற்று இருந்தாலும் இதுவரை இறுதியான முடிவுகள் வெளியாக வில்லை. பாரக் ஒபாமா அதிபராக பதவி வகித்த போது துணை ஜனாதிபதியாக பணியாற்றியவர்தான் ஜோ பிடன். அந்த வகையில் இரண்டு பேருக்கும் இடையிலான நெருக்கம் இருக்கவே செய்கிறது. இந்நிலையில் எதிர்ப்பார்ப்புகள் மேலும் அதிகரித்து இருக்கின்றன.

More News

ரஜினிக்கு அரசியலைவிட உடல்நலம் ரொம்ப முக்கியம்: கமல்ஹாசன்

உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ரஜினி குறித்த கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன்

விபிஎப் கட்டணத்தை ஏற்கிறோம், ஆனால் ஒரு நிபந்தனை: திரையரங்கு உரிமையாளர்கள்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ளதால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு மட்டுமின்றி

அது என் குழந்தை இல்லை: வளைகாப்பு நிகழ்ச்சியில் மனைவியின் கள்ளக்காதலை அம்பலப்படுத்திய கணவர்!

மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சியின்போது தனது மனைவியின் வயிற்றில் இருப்பது தன்னுடைய குழந்தை இல்லை என்றும் அது கள்ளக்காதலால் உருவான குழந்தை என்றும் கணவர்

இந்தியச் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 3 வயது சிறுமி!

22 இந்திய மொழிகளின் பெயர்களை குறைந்த வேகத்தில் உச்சரித்து 3 வயது சிறுமி, மத்திய அரசின் இந்தியச் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளார்.

காட்டு யானையைச் சுட்டுக் கொன்ற விவசாயி… வனத்துறையினரால் கைது!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டை அருகே வனத்துறையை ஒட்டிய பகுதியில் 12 வயது பெண் யானை ஒன்று சுட்டுக் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.