பத்மபூஷன் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார் 'தல'

  • IndiaGlitz, [Wednesday,September 20 2017]

'தல' என்று அன்புடன் கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களால் அழைக்கப்படும் தோனிக்கு பத்மவிருது அளிக்க வேண்டும் என பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது. இந்த தகவலை பிசிசிஐ வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

பிசிசிஐ தலைவர் பி.கே.கண்ணா இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, 'இந்தியாவின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்மபுஷன் விருதுக்கு பிசிசிஐ தரப்பில் இருந்து தோனி மட்டுமே இந்த ஆண்டு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். கிரிக்கெட் மீது அவருக்கு இருக்கும் அர்ப்பணிப்பு உணர்வு காரணமாக இந்த விருதுக்கு அவர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்' என்று கூறினார்.

302 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 9737 ரன்கள் அடித்துள்ளார். அதேபோல் 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4876 ரன்கள் அடித்துள்ளார். அதுமட்டுமின்றி 78 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 1212 ரன்கள் அடித்துள்ளார். மேலும் தோனி தலைமையிலான இந்திய அணி 2007ஆம் ஆண்டு டி-20 உலகக்கோப்பையையும், 2011ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையையும் வென்றுள்ளது. மேலும் ஒரு விக்கெட் கீப்பராக தோனி இதுவரை 584 கேட்சுகளை பிடித்துள்ளார்.

இத்தகையை சாதனை வைத்துள்ள தோனி பத்மபூஷன் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு இந்த விருது நிச்சயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தோனிக்கு பத்மபூஷன் விருது கிடைத்தால் இந்த விருதை பெறும் 11வது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெறுவார். இதற்கு முன்னர் சச்சின், கபில்தேவ், ராகுல் டிராவிட் உள்பட 10 கிரிக்கெட் வீரர்களுக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.

More News

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சமீபத்தில் சபாநாயகர் தனபால் அவர்கள் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர்களை தகுதிநீக்கம் செய்தார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்றது

இறுதிக்கட்டத்தை நோக்கி நயன்தாராவின் 'இமைக்கா நொடிகள்'

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களின் பட்டியலில் இடம்பெற்ற படங்களில் ஒன்று லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'இமைக்கா நொடிகள்.

2ஜி வழக்கு தீர்ப்பு தேதி மற்றும் நேரம் அறிவிப்பு

ஒருபக்கம் தமிழகத்தில் 18 எம்.எல்.ஏக்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வரவுள்ளது.

பூஜையுடன் தொடங்கியது விஷாலின் 'சண்டக்கோழி 2'

விஷால் நடித்த 'துப்பறிவாளன்' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வசூலை பெற்று வருவதால் ஒரு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் உற்சாகத்துடன் இருக்கின்றார் விஷால்.

மகளிர் மட்டும் ஏற்படுத்திய விழிப்புணர்வால் ஃபேஸ்புக்கில் தோழிகளை தேடும் பெண்கள்

பொதுவாக ஆண்கள் பள்ளி, கல்லூரி படிப்புகளை முடித்துவிட்டு வேலைக்கு சென்று திருமணம் செய்து கொண்டு  செட்டில் ஆனாலும் பள்ளி காலத்தில் இருந்தே நட்பை மெயிண்டன் செய்து வருவார்கள்.