பிசிசிஐ போட்ட புது திட்டம்… 5ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் குழப்பம் தீருமா?

இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி யாருக்கு எனத் தீர்மானிக்க முடியாத நிலையில், மீண்டும் இந்த 5 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை நடத்தி, வெற்றியை தீர்மானித்துக் கொள்ளலாம் என பிசிசிஐ தாமாக முன்வந்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிக் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வந்தது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றிருந்ததால் 5 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குறித்து ரசிகர்கள் அதிக எதிர்ப்பார்ப்புகளை வெளிப்படுத்தி வந்தனர். இந்நிலையில் 5 ஆவது டெஸ்ட் போட்டியை ரத்து செய்துகொள்ளலாம் என பிசிசிஐ இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தை கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் போட்டி விலக்கிக் கொள்ளப்பட்டது.

ஆனால் 5 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி யாருக்கு என்ற குழப்பம் கடந்த சில தினங்களாக கிரிக்கெட் ரசிகர்களிடைய கடும் பதற்றத்தை ஏற்படுத்தி வந்தது. இந்தப் பிரச்சனையில் இந்தியப் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, பவுலிங் பயிற்சியாளர், பிசியோ தெரபிஸ்ட் உட்பட இந்திய அணியில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக பிசிசிஐ போட்டியை விலக்கிக் கொள்ளலாம் என கோரிக்கை வைத்தது. இந்தக் கோரிக்கை போட்டி நடைபெற இருந்த 2 மணி நேரத்திற்கு முன்பு வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதில் பிசிசிஐ கொரோனா காரணமாக போட்டியை ரத்துச் செய்திருந்தாலும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்தக் காரணத்தை ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களிடையே இருந்த மனநிலை மற்றும் அணிக்குள் இருந்த குழப்பம் காரணமாக போட்டியை ரத்துக் செய்து கொண்டனர். இதனால் இங்கிலாந்து அணிக்கு புள்ளிகள் வழங்கப்பட வேண்டும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைமை அதிகாரி டாம் ஹாதின் கேட்டுக்கொண்டார்.

ஐசிசி விதிகளின்படி சர்வதேசப் போட்டிகளில் ஒரு அணியோ அல்லது இரு அணிகளோ சேர்ந்து போட்டியை ரத்துச் செய்துகொண்டால் புள்ளிகள் எதுவும் வழங்கப்படாது. மேலும் ஏற்கனவே இருந்த புள்ளிகளின் அடிப்படையில் வெற்றித் தீர்மானிக்கப்படும். ஆனால் இந்த 5 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியைப் பொறுத்தவரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்தியா கூறும் காரணங்களை ஒப்புக்கொள்ளாமல் வெற்றி யாருக்கு என தீர்மானிக்கும் வகையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐசிசிக்கு கடிதம் எழுதி இருக்கிறது.

எனவே இந்தக் குழப்பத்தை தீர்க்கும் வகையில் இந்தியாவின் பிசிசிஐ ஒரு புது திட்டம் தீட்டியிருக்கிறது. இதன்படி இந்திய அணி வரும் 2022 ஜுலை மாதத்தில் இங்கிலாந்துக்கு எதிரான சுற்றுப் பயணத்தின்போது 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. அப்போது ஒத்திவைக்கப்பட்ட 5 ஆவது டெஸ்ட் போட்டியையும் விளையாடி வெற்றியை தீர்மானித்துக் கொள்ளலாம் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு தனது கருத்தை தெரிவித்து உள்ளது. இதனால் 5 ஆவது டெஸ்ட் போட்டி குறித்த முடிவு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் 5 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ரத்தானதால் இங்கிலாந்துக்கு கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.304 கோடி நஷ்டம் ஆனதாகத் தகவல் கூறப்படுகிறது. தொலைக்காட்சிகளில் போட்டியை ஒளிப்பரப்பும் உரிமையை பெற்ற நிறுவனத்திற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பணத்தை திரும்பக் கொடுத்து வருகிறதாம். அதோடு போட்டி நடைபெற இருந்த ஓல்ட் ட்ராஃபாட் மைதானத்தில் 5 நாள் போட்டிக்கான டிக்கெட் முழுவதும் விற்கப்பட்டு விட்டதாம். இதனால் அதற்கான பணத்தையும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் திரும்ப கொடுத்து வருகிறது.

இதுபோன்ற காரணங்களால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்திய வீரர்கள் மேல் அதிக காட்டத்துடன் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

புற்றுநோயால் பிரபல நடிகரின் மனைவி உயிரிழப்பு… திரையுலகினர் அதிர்ச்சி!

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம்வருபவர் நடிகர் உத்தேஜ். இவருடைய மனைவி பத்மாவதிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே புற்றுநோய் பாதிப்பு இருப்பது

இளைய வயது நடிகருடன் காதலா? கிண்டலடித்த நெட்டிசன்களை அலறவிட்ட நடிகை!

பாலிவுட் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகை ஒருவர் தன்னைவிட 9 வயது இளம் நடிகர் ஒருவரை காதலிப்பதாக வதந்தி கிளம்பியது.

நான்கு தெலுங்கு பட நிறுவனத்துடன் தனுஷ் ஒப்பந்தமா?

தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கிவரும் 'மாறன்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும், அது மட்டுமின்றி சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில்

கவினின் 'லிஃப்ட்' படத்தில் என்ன பிரச்சனை: விளக்க அறிக்கை!

கவின் நடிப்பில் 'லிஃப்ட்' என்ற திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் இந்த படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தின் பிரச்சினை குறித்து லிப்ரா நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பள்ளிக்கு லீவு போட்டுவிட்டு சைடு வேலைப்பார்த்த ஆசிரியர்… வசமா மாட்டிய சம்பவம்!

இத்தாலி நாட்டைச் சேர்ந்த கணித ஆசிரியர் ஒருவர் கடந்த 3 வருடங்களாகத் தனக்கு உடல்நிலை சரியில்லை