close
Choose your channels

பிக்பாஸ் கவின் அடுத்த படத்தில் நாயகியாகும் 'பீஸ்ட்' நடிகை!

Monday, March 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற கவின் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்த நடிகை நாயகியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கவின் நடித்த ’லிப்ட்’ என்ற திரைப்படம் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. மேலும் அவர் தற்போது இரண்டு படங்களில் நடித்து வருவதாகவும் அஜித்தின் அடுத்த படத்திலும் அவர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் கவின் நடிக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை அம்பேத்குமார் என்பவர் தயாரிக்க இருக்கும் நிலையில் கணேஷ் பாபு என்பவர் இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ள நிலையில் கவின் ஜோடியாக இந்த படத்தில் நடிகை அபர்ணாதாஸ் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடிகை அபர்ணாதாஸ், தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.