பிரபல சூப்பர் ஸ்டார் நடிகரின் அடுத்த படத்தில் 'பீஸ்ட்' நாயகி:  இன்று பூஜை!

  • IndiaGlitz, [Thursday,February 03 2022]

பிரபல சூப்பர் ஸ்டார் நடிகரின் அடுத்த படத்தில் நடிக்க ‘பீஸ்ட்’ நாயகி பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் பூஜை இன்று நடந்துள்ளது.

தளபதி விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார் என்பதும் இவர் ஏற்கனவே பிரபாஸ் நடித்து முடித்துள்ள ‘ராதேஷ் யாம்’ சிரஞ்சீவி நடித்துவரும் ’ஆச்சார்யா’ மற்றும் பாலிவுட்டில் தயாராகிவரும் ’சர்க்கஸ்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கும் அடுத்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த பூஜையில் படக்குழுவினர் கலந்துகொண்ட நிலையில் இந்த படத்தில் மகேஷ்பாபு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே'மகேஷ்பாபுவுடன் ‘மகரிஷி’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை திரிவிக்ரம் இயக்க உள்ளார் என்பதும் தமன் இசையமைக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மகேஷ்பாபுவின் 28வது படமான இந்தப் படம் வரும் ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More News

நம்பிக்கையை மட்டுமே மூலதனமாக கொண்ட பயணம்: ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் கடிதம்!

சிவகார்த்திகேயன் நடித்த முதல் திரைப்படமான 'மெரீனா' வெளியாகி 10 ஆண்டுகள் ஆனதை அடுத்து இந்த பத்தாண்டு பயணம் குறித்து ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

சிலம்பம் வீரர்களுக்கு தமிழ் நடிகர் செய்த மகத்தான உதவி!

தமிழர்களின் தற்காப்பு கலைகளில் ஒன்றான சிலம்பம் விளையாட்டின் வீரர் மற்றும் வீராங்கனைக்கு தமிழ் நடிகர் ஒருவர் மகத்தான உதவி செய்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சினேகாவின் அம்மாவை பார்த்திருக்கிங்களா? வைரல் புகைப்படம்

சமீபத்தில் நடிகை சினேகாவின் மகள் பிறந்தநாளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகின

பார்த்திபனின் புதிய படத்தில் 3 ஆஸ்கார் பிரபலங்கள்… எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராகவும் இயக்குநராகவும் ரசிகர்கள்

ஐபிஎல்-லை வைத்துக்கொண்டு தீவிர டென்னிஸ் பயிற்சியில் தோனி… என்ன காரணம்?

ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் பெங்களூருவில் வரும் 12,13 ஆம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. இதையடுத்து வரும் ஏப்ரலில்