close
Choose your channels

சூர்யாவுடன் முதன்முதலாக இணைந்த 'பீஸ்ட்' டான்ஸ் மாஸ்டர்

Sunday, October 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜயின் ‘பீஸ்ட்’ படத்தில் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்தவர் தற்போது முதல் முறையாக சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்து உள்ளார் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’எதற்கும் துணிந்தவன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் ஒரே ஒரு பாடலின் படப்பிடிப்பு மட்டும் மீதம் இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் ’எதற்கும் துணிந்தவன்’படத்தில் இடம்பெறும் இந்த பாடலுக்கு நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

சூர்யா அவர்கள் பார்ப்பதற்கு மிகவும் எளிமையாக உள்ளதால் அவருடன் பணிபுரிந்தது தனக்கு மிகவும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது என்றும் முதன்முதலாக அவருடன் ஒரு பாடலில் பணிபுரிந்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்எஸ் பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், தேவதர்ஷினி உள்பட பலர் நடித்த இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.