close
Choose your channels

'பீஸ்ட்' நாயகியின் பிறந்த நாளில் வெளியான சூப்பர் போஸ்டர்! ரசிகர்கள் குஷி!

Wednesday, October 13, 2021 • தமிழ் Comments

தளபதி விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நடிகை பூஜா ஹெக்டே இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு விஜய் ரசிகர்கள் உள்பட அனைத்து தரப்பு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘பீஸ்ட்’ படத்தை அடுத்து அவர் சிரஞ்சீவி நடித்து வரும் ’ஆச்சாரியா’ பிரபாஸ் நடத்திவரும் ’ராதே ஷ்யாம்’ ரன்வீர் கபூர் நடித்து வரும் ’சர்க்கஸ்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’ராதே ஷ்யாம்’ படக்குழுவினர் பூஜாவின் பிறந்தநாளை அடுத்து சூப்பர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர் என்பதும், அந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் ‘பீஸ்ட்’ படக்குழுவினர்களும் பூஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இந்த வேண்டுகோள் நிறைவேற்றப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz