சன் டிவியின் 'பீஸ்ட்' நிகழ்ச்சியின் தொகுப்பாளர் இவரா? செம காமெடி இருக்கும்போல!

தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’  திரைப்படம் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் நாளை வெளியாக உள்ளது. மேலும் ஏப்ரல் 10-ஆம் தேதி சன் டிவியில் விஜய் உள்பட படக்குழுவினர் அளித்த பேட்டி வெளியாகியுள்ளது.

கடந்த 9 ஆண்டுகளுக்கு பிறகு தளபதி விஜய் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்து உள்ளதால் இந்த பேட்டியை பார்க்க விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் .

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் யார் என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. ‘பீஸ்ட்’ படத்தின் இயக்குனர் நெல்சன் தான் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் என தெரியவந்துள்ளது. ஏற்கனவே விஜய் டிவியில் பல காமெடி நிகழ்ச்சிகளின் இயக்குனராக பணிபுரிந்த அனுபவம் உள்ளவர் நெல்சன் என்பதும் ‘கோலமாவு கோகிலா’ மற்றும்  ’டாக்டர்’ படத்தின் ரிலீஸின் போது அவர் கலந்து கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி முழுக்க முழுக்க காமெடியாக இருந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ‘பீஸ்ட்’ படத்தின் சிறப்பு நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நெல்சன் என்ற தகவல் வெளிவந்ததை அடுத்தது இந்த நிகழ்ச்சியும் கலகலப்பாகவும் காமெடியாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

டுவிட்டரில் இணைந்த சுதா கொங்கராவிடம் அஜித் ரசிகர்கள் கேட்ட முதல் கேள்வி!

மாதவன் நடித்த 'இறுதிச்சுற்று' சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' போன்ற சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் சுதா கொங்காரா நேற்று டுவிட்டர் இணையதளத்தில் முதல் முறையாக இணைந்துள்ளார்.

இன்று ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் பட்டியல் இதோ!

கடந்த சில ஆண்டுகளாக ஓடிடி பிளாட்பார்ம் அறிமுகமானதிலிருந்து மக்களுக்கு வீடு தேடி திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

சமந்தாவின் 'ஓ சொல்றியா மாமா' பாடலின் நடன இயக்குனர் மீது பாலியல் வழக்கு!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா' படத்தில் இடம்பெற்ற 'ஓ சொல்றியா மாமா' என்ற சமந்தாவின் ஐட்டம் பாடலுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்த நடன இயக்குனர்

'பீஸ்ட்' படத்தில் தளபதி விஜய்யின் மாஸான கேரக்டர் பெயர்!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்'  திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் குறித்த செய்திகள் தினந்தோறும் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் வில் ஸ்மித் மீது ஒழுங்கு நடவடிக்கை… ஆஸ்கர் விருதுக்கு ஆபத்தா?

94 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட பிரபல அமெரிக்Ĩ