ஜார்ஜியாவை அடுத்து மீண்டும் வெளிநாடு பறக்கும் 'பீஸ்ட்' குழுவினர்!

  • IndiaGlitz, [Friday,July 30 2021]

தளபதி விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்ற நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மீண்டும் வெளிநாட்டில் நடைபெற இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் திரைப்படம் ‘பீஸ்ட்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் ஜார்ஜியா நாட்டில் நடைபெற்றது. அதன் பின்னர் ஊரடங்கு காரணமாக சில மாதங்கள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. சென்னை படப்பிடிப்பில் விஜய், பூஜா ஹெக்டே சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகள் மற்றும் சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு வரும் திங்கள் முதல் தொடங்க இருப்பதாகவும் இந்த படப்பிடிப்பு முடிந்தவுடன் படக்குழுவினர் வரும் செப்டம்பர் மாதம் ரஷ்யா செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ரஷ்யாவில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

‘பீஸ்ட்’ படத்தை வரும் 2022ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கேற்ற வகையில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

More News

'சார்பாட்டா பரம்பரை' படத்தில் நடித்த கே.பாலசந்தர் மருமகள்: ஆச்சரிய தகவல்!

சமீபத்தில் வெளியான பா ரஞ்சித்தின் 'சார்பாட்டா பரம்பரை' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் இந்த படத்தை திரையுலகினர், ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகள்

ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு அவதூறு வழக்குப்பதிவு செய்த பிரபல நடிகை!

விஜய், பிரபுதேவா உள்பட முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ஒருவர் ரூபாய் 25 கோடி நஷ்ட ஈடு கேட்டு அவதூறு வழக்கு பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

செம ஸ்டைலான மாஸ் கெட்டப்பில் தல தோனி… வைரல் புகைப்படம்!

“கேப்டன் கிங்“ தல தோனி அவர்களுக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு.

பார்கவுன்சிலுக்கே சாயம் பூசிய இளம்பெண்… சட்டம் படிக்காமல் ஏமாற்றியது அம்பலம்!

வக்கீல் தொழில் செய்பவர்களிடம் எதையும் மறைக்க முடியாது. தோண்டி துருவி உண்மையைக் கண்டுபிடித்து

அரசியலை விட்டுவிட்டு பிசினஸில் கவனம்…  முன்னாள் அமைச்சர் திடீர் முடிவு!

கடந்த அதிமுக அமைச்சரவையில் பள்ளி கல்வித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை