close
Choose your channels

'பீஸ்ட்' படத்தின் 3ஆம்கட்ட படப்பிடிப்பு: பூஜா ஹெக்டே பகிர்ந்த புகைப்படம்!

Sunday, August 1, 2021 • தமிழ் Comments

விஜய் நடித்துவரும் ’பீஸ்ட்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது என்பதும் அதன் பின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது என்பதும் தெரிந்ததே. சமீபத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இன்று முதல் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என்றும் இந்த படப்பிடிப்பு சென்னை பின்னி மில்லில் நடைபெறும் என்றும் தகவல் வெளியானது

இந்த நிலையில் இன்று மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியதாகவும், அந்த படப்பிடிப்பில்தான் கலந்து கொண்டதாகவும் நாயகி பூஜா ஹெக்டே தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். மேலும் இது குறித்த புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ’பீஸ்ட்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெறவுள்ளது என்பதும் இதற்காக படக்குழுவினர் வரும் செப்டம்பரில் ரஷ்யா செல்லவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வரும் இந்த படத்தில் அபர்ணா தாஸ், யோகி பாபு, விடிவி கணேஷ், உள்பட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார் என்பதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz