ஜெயலலிதா மரணத்திற்கு முந்திய நாள் நடந்தது என்ன? மனோபாலா திடுக்கிடும் தகவல்

  • IndiaGlitz, [Wednesday,April 12 2017]

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 5ஆம் தேதி மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டாலும், அவர் இறந்த தேதி எது? என்பது குறித்து சர்ச்சைக்குரிய சந்தேகங்களை அவ்வப்போது பலர் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் ஜெயலலிதா இறந்ததாக அறிவிக்கப்பட்ட டிசம்பர் 5ஆம் தேதிக்கு முந்திய நாளான டிசம்பர் 4ஆம் தேதியே தன்னிடம் படப்பிடிப்பை கேன்சல் செய்யுமாறு அதிமுக அமைச்சர் ஒருவரின் மைத்துனர் தன்னிடம் கூறியதாக பிரபல நடிகர், இயக்குனர் மனோபாலா தற்போது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மனோபாலா அந்த பேட்டியில் மேலும் கூறியதாவது: 'நான் டிசம்பர் 4ம் தேதி ஜெயலலிதா அம்மாவைப் பார்க்க மருத்துவமனை சென்றேன். அங்கு சிறு பரபரப்பு காணப்படது. லிப்டில் ஏறி மேல் தளத்திற்கு சென்று பார்த்தால் அத்தனை எம்.எல்.ஏக்களும் இருந்தனர். ஒரே மௌன களமாக இருந்தது. ஒரு அமைச்சரின் மைத்துனர் வேகமாக என்னிடம் வந்து அண்ணா ஷூட்டிங் இருந்தால் உடனே கேன்சல் பண்ணிட்டு வீட்டுக்கு போங்க என்று கூறினார். ஏதோ நடக்கப்போகிறது என நினைத்து நானும் உடனே ஷூட்டிங்கை கேன்சல் செய்தேன். மறுநாள் வரை எந்த அறிவிப்பும் வரவில்லை. நான் ஏன் கேன்சல் செய்தேன் என இதுவரைக்கும் புரியவில்லை' என்று கூறினார்

ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கூறி வரும் நிலையில் மனோபாலாவின் இந்த பேட்டி அதை உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'விஜய் 62' படத்திலும் 3 நாயகிகளா?

அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 61' படத்தில் காஜல் அகர்வால், சமந்தா மற்றும் நித்யாமேனன் என மூன்று நாயகிகள் நடித்து வருவது தெரிந்ததே.

பெட்ரோல்-டீசல்: மே 1 முதல் தினசரி விலைமாற்றம்

இந்தியாவில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசலின் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை கச்சா எண்ணெயின் சர்வதேச விலைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

26 வருடங்களுக்கு பின் ராஜ்கிரணுடன் மீண்டும் மோதும் பி.வாசு

பிரபல இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்த 'சிவலிங்கா' திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது.

'தல' தோனியை அவமதித்த புனே அணி உரிமையாளரின் சகோதரருக்கு சாக்சி கொடுத்த பதிலடி

பிரபல கிரிக்கெட் வீரர் தல தோனி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகியபோதிலும், அவருக்கு ரசிகர்கள் கூட்டம் குறையாமல் அதே புகழுடன் உள்ளார். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதால் தற்போது அவர் புனே அணியில் விளையாடி வருகிறார்...

மக்கள் திருப்பி அடித்தால் ராணுவமே வந்தாலும் தாங்காது - மயில்சாமி

திருப்பூரில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று அறவழியில் போராடிய பெண்களை காட்டுமிராண்டித்தனமாக போலீசார் தாக்கியதற்கு பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் நகைச்சுவை நடிகர் மயில்சாமி தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விவாதத்தில் இதுகுறித்து ஆவேசமாக கருத்து தெரிவித்தார்.