'மாஸ்டரை' முந்தும் விஜய்சேதுபதியின் இன்னொரு படம்!

  • IndiaGlitz, [Tuesday,January 14 2020]

தளபதி விஜய் நடித்து வரும் ’மாஸ்டர்’ திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் விஜய் சேதுபதியின் பிறந்த நாளான ஜனவரி 16 ஆம் தேதி இந்த படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் வெளிவரும் என்றும் அந்த போஸ்டரில் விஜய், விஜய்சேதுபதி ஆகிய இருவரும் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் ’மாஸ்டர்’ செகண்ட்லுக் வெளியாகும் முந்திய நாள் அதாவது நாளை, விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் இன்னொரு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த படம்தான் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற திரைப்படம் ஆகும்.

வெங்கடகிருஷ்ண ரோக்நாத் என்பவர் இயக்கி வரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் மேகாஆகாஷ், விவேக், மோகன் ராஜா உள்பட பலர் நடித்து வருகின்றனர். நிவாஸ் கே பிரசன்னா இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தை சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'மாஸ்டர்' படத்தின் அட்டகாசமான அப்டேட்: விஜய் ரசிகர்கள் குஷி!

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ஆகிய இருவரும் இணைந்து நடித்து வரும்'மாஸ்டர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே

ஹாலிவுட்டில் ரீமேக்காகிறதா ஒத்த செருப்பு..?! பார்த்திபன் விளக்கம்.

'ஒத்த செருப்பு' படத்தை ஹாலிவுட்டில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

டிக்டாக்கில் பழக்கத்தால் பள்ளி மாணவி கர்ப்பம்: பரிதாபமாக போன உயிர்!

டிக் டாக் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்றும் இந்த டிக்டாக் செயலியால் இளம் பெண்கள் மற்றும் குடும்ப பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்

பிரபல நடிகைக்கு ஆலோசகராக விரும்பும் யோகா குரு ராம்தேவ் 

பிரபல நடிகை தீபிகா படுகோன் சமீபத்தில் மாணவர்களின் போராட்டத்துக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார் என்பது தெரிந்ததே. தீபிகா படுகோனே இந்த போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்ததால்

இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் நீங்கள் இரண்டு பேர்தான்..! அமெரிக்கா ஈரானை வறுத்தெடுத்த கனடா பிரதமர்.

ஈரான், அணு ஆயுதங்கள் இல்லாத நாடாக இருக்க வேண்டும். அதே நேரத்தில், அங்கிருக்கும் பதற்றநிலைக்கு அமெரிக்காவின் நடவடிக்கைகளும் காரணமாகத்தான் இருக்கின்றன.