close
Choose your channels

'ராட்சசன்' தெலுங்கு ரீமேக்கில் பிரபல தயாரிப்பாளரின் மகன்?

Wednesday, January 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான வெற்றி திரைப்படங்களில் ஒன்று 'ராட்சசன்'. த்ரில் திரைக்கதை, விஷ்ணு விஷால், அமலாபால் நடிப்பு, வில்லனின் மிரட்டல் ஆகியவை இந்த படத்தின் பிளஸ்களாக அமைந்ததால் இந்த படம் சென்னை உள்பட பல நகரங்களில் 50 நாட்கள் ஓடியதுடன் அனைத்து தரப்பினர்களுக்கும் நல்ல லாபத்தை கொடுத்தது.

இந்த நிலையில் இந்த படத்தை தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தைகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது. தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பெல்லாம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ், விஷ்ணு கேரக்டரில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இவர் பிரபல தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷின் மகன் என்பதும் ஏற்கனவே இவர் 'சுந்தரபாண்டியன்' ரீமேக் படமான 'அலுடு சீனு' என்ற படத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் ஏற்கனவே சமீபத்தில் வெளியான 'கவசம்' என்ற ஹிட் படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்தவர் என்பதும் இந்த படத்தில் மீண்டும் போலீசாக நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமலாபால் மற்றும் வில்லன் கேரக்டரில் நடிக்க நட்சத்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும், இந்த படத்தை 'வீரா', 'ரைட்' ஆகிய படங்களை இயக்கிய ரமேஷ் வர்மா இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. நடிகர் நிதின் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்கவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.