close
Choose your channels

தனுஷின் 'கர்ணன்' தெலுங்கு ரீமேக்கில் நடிப்பது இவரா?

Friday, April 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த திரைப்படம் வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென திரையரங்குகளுக்கு 50% பார்வையாளர்கள் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது என்பதும் அதன் பின்னர் திரையரங்குகள் மூடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் கர்ணன் திரைப்படத்தின் லாபம் குறைந்தாலும் அந்த படத்தின் வசூல் திருப்தியாக இருந்தது என விநியோகிஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்தனர்

இந்த நிலையில் ‘கர்ணன்’ திரைப்படம் தமிழில் சூப்பர் ஹிட்டானதை அடுத்து இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருந்தன. தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ‘கர்ணன்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் படப்ப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே தனுஷ் நடித்த ’அசுரன்’ திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது என்பதும் அதில் தனுஷ் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.