இந்திய கிரிக்கெட்டில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் பென் ஸ்டோக்ஸ் வெளியிட்ட கருத்து!!! குறுக்கே வந்த பாகிஸ்தான்!!!

 

கடந்த சில தினங்களாக இந்திய கிரிக்கெட் வீரர்களைப் பற்றி பாகிஸ்தான் ஊடகங்கள் தாறுமாறான கருத்துகளை வெளியிட்டு வருகின்றன. இந்தியா பாகிஸ்தானை நாக் அவுட் செய்வதற்குத்தான் உலகக் கோப்பையின் 38 ஆவது தொடர் போட்டியில் இங்கிலாந்திடம் தோற்று போனது என்ற காரசாரமான விவகாரம் தற்போது தலைத்தூக்க ஆரம்பித்து இருக்கிறது. இந்த சலசலப்பு தனாக உருவாக வில்லை என்பதும் இன்னொரு சுவாரசியம்.

இங்கிலாந்து கிரிக்கெட்டின் ஜாம்பவனாக கருதப்படும் பென் ஸ்டோக்ஸ் தற்போது கிரிக்கெட்டை பற்றிய தனது அனுபவத்தை ஒரு புத்தகமாக வெளியிட இருக்கிறார். அதன் பெயர் ஆன் ஃபயர். புத்தகத்தின் பிரமோஷனுக்காக இப்போது ஸ்டோக்ஸ் இரண்டு கருத்துகளை கூறியிருக்கிறார். ஒன்று இங்கிலாந்திற்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் கூட்டணியை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை என்பது. மற்றொன்று தோனியின் நோக்கம் என்னவென்றே என்னால் கணிக்க முடியவில்லை. அவர் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று சுவாரசியம் காட்டவில்லை என்பது. இந்த இரண்டு கருத்துகளும் அடிப்படையில் எந்த நோக்கத்தில் இருந்து ஆசிரியர் கூறினார் என்று ரசிகர்களுக்கும் தெரியாது. ஏன் சம்பந்தப் பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கே தெரிய வாய்ப்பில்லை. காரணம் இக்கருத்து புத்தகத்தின் பிரமோஷனுக்காகச் சொல்லப்பட்டவை. இது முழுமையான தகவலும் அல்ல. முழுமையான விவரங்கள் புத்தகத்தில் இருக்கலாம். அது புத்தகம் வெளியான பின்புதான் தெரியும்.

நிலைமை இப்படியிருக்க பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக் “இந்திய அணி பாகிஸ்தானை உலகக் கோப்பை போட்டியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அப்படி விளையாடினது” எனக் கொளுத்தி போட்டு இருக்கிறார். இந்தக் கருத்தைப் பிடித்துக் கொண்ட பாகிஸ்தான் ஊடகம் இந்திய வீரர்கள் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுவதாக விவாதங்களில் ஈடுபட ஆரம்பித்து விட்டனர். பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சிக்கந்தர் சிங், “பாகிஸ்தானை வெளியேற்ற வேண்டும் என்றே இந்தியா விரும்பியது” என்று பென் ஸ்டோக்ஸ் தனது புத்தகத்தில் குறிப்பிட்டு இருப்பதாக மேலும் கொளுத்தி போட்டு இருக்கிறார். நிலைமை பூதாகரமாக மாறிய பின்பு பென் ஸ்டொக்ஸ் “பாகிஸ்தானை வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்தியா விளையாடியது” என நான் எனது புத்தகத்தில் குறிப்பிடவில்லை என்று ஓபன் டாக் கொடுத்திருக்கிறார்.

உண்மையில் இங்கிலாந்து Vs இந்தியா போட்டியில் என்ன நடந்தது என்பதை ஒரு தடவை திருப்பி பார்க்க வேண்டிய அவசியமும் இருக்கிறது. கடந்த ஆண்டு ஜுன் மாதம் 30 ஆம் தேதி இங்கிலாந்தின் மிகப் பெரிய ஸ்டேடியமான எட்ஸ்பேஸ்டன் ஸ்டேடியத்தில் இங்கிலாந்திற்கும் இந்தியாவிற்கும் இடையே 38 ஆவது தொடர் போட்டி நடைபெற்றது. அன்றைய வானிலை அறிக்கைப்படி Clear Skies Warm day Perferct day for Cricket என்று கூறப்பட்டு இருந்தது. முதலில் பேட்டிங் செய்வதற்கு தேர்ந்தெடுக்கப் பட்ட இங்கிலாந்து அணி ஜேகன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோவை களம் இறக்கியது. முதல் விக்கெட் 22.1 ஓவரில் 160 ரன்களை குவித்த பிறகு விழுந்தது. இப்படித் தொடங்கிய போட்டி மிகவும் சுவாரசியத்தோடு 337/7 என்று இங்கிலாந்தின் ஆட்டம் முடிந்தது. இங்கிலாந்து கொடுத்திருக்கும் டார்கெட் படி ஒரு ஓவருக்கு இந்தியா 7 ரன்கள் எடுத்தாக வேண்டும்.

பின்பு பேட்டிங் செய்ய கிளம்பிய இந்தியா வெறுமனே 8 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்தது. ரன்ரேட் ஒரு ஓவருக்கு 10 என்ற நிலைமையில் கோலியும் ரோஹித்தும் களம் இறங்கினார்கள். டார்கெட் 330 என இருந்த நிலையில் இரண்டு பேரும் அதிரடி காட்டுவது தேவையில்லை எனவும் இந்தியா நிதானமான நிலையில் விளையாடினால் மட்டுமே ஜெயிக்க முடியும் என்ற நிலையிலும் விளையாடத் தொடங்கியது. கோலி மிகவும் நிதானமாகவே விளையாடினார். ரோஹித் மோசமான பந்துகள் வரும்போது அதை தவிர்த்தும் விளையாடினார். ரோஹித் சர்மா 102/100 ரன்களையும் கோலி 76/66 என்ற ரன்களையும் எடுத்து ஆட்டம் இழந்தனர். இப்படி இவர்கள் நிதானமாக விளையாடிய ஆட்டத்தைத்தான் நம்ம பென் ஸ்டோக்ஸ் புரிந்து கொள்ள முடியாத மர்மம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

அடுத்து டோனி விவகாரம். டோனி களம் இறங்கியபோது ஒரு ஓவருக்கு 10 ரன்களை எடுத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என இருந்தது. கூட்டணி சேர்ந்த பாண்டயா அதிரடியாக விளையாடினார். அப்போது டோனி மிகவும் நிதானமாக விளையாட வேண்டிய தேவை இருந்தது. பாண்டயாவிற்கு பிறகு களம் இறங்கி வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனவுடன் தோல்வி உறுதி என்ற பயம் அனைவரது முகத்திலும் வெளிப்படையாகவே தெரிந்தது. இப்படியிருக்கும்போது டோனி ஏன் அதிரடி காட்டாமல் நிதானமாக விளையாடினார்? அவருக்கு வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணமே இல்லையா எனக் கேள்வி எழுப்புவதில் ஏதாவது நியாயம் இருக்கிறதா என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தற்போது கேள்வி எழுப்பி இருக்கிறது.

ஆக பென் ஸ்டொக்ஸ் சொன்ன இரண்டு கருத்துகளுமே புத்தகத்தின் பிரமோஷனுக்காக மட்டுமே. ஆனால் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமையைப் பார்த்தால் அந்தப் புத்தகம் லட்சக் கணக்கில் மட்டும் அல்ல கோடி கணக்கில் விற்றால் கூட ஆச்சர்யப் படுவதற்கு ஒன்றுமில்லை. கொரோனா நேரத்தில் விளையாட்டு வீரர்கள் இப்படி சுவாரசியத்தை கிளப்பி விடுவது கூட ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெறக் காரணமாக அமைந்து விடுகிறது.

More News

மொட்டை மாடியில் முத்தம், கணவருடன் ரொமான்ஸ்: பிரபல விஜேயின் சேட்டை

இந்த கொரோனா லாக்டவுன் காலத்தில் திரைப்பட நடிகைகள் மற்றும் தொலைக்காட்சி தொடர் நடிகைகள் தங்களுடைய கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை

மதுரை சலூன் கடைக்காரர் மகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக முதல்வர்

மதுரையை சேர்ந்த சலூன்கடைக்காரர் மோகன் என்பவரின் மகள் நேத்ரா என்பவர் தனது எதிர்கால கல்விக்காக தந்தை சேர்த்து வைத்திருந்த ரூ.5 லட்சத்தை தனது பகுதியில் ஊரடங்கால் கஷ்டப்படும் ஏழைகளுக்கு

நார்வேயில் ஒரு கிராமமே கடலுக்குள் மூழ்கியது!!! பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ காட்சி!!!

டென்மார்க்கின் கோபன்ஹெகன் மாகாணத்தில் உள்ள ஆல்டா பகுதியில் கடந்த புதன்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது.

பொது இடத்தில் அதிகாரியை செருப்பால் அடித்த பாஜக பெண் உறுப்பினர்!!! நடந்தது என்ன???

டிக்டாக் பிரபலம் மற்றும் பாஜக பெண் உறுப்பினருமான சோனாலி போகாட் விவசாய உற்பத்தி சந்தையில் வேலைப் பார்க்கும் அதிகாரி ஒருவரை பொது இடத்தில் வைத்து செருப்பால் சரமாரியாக அடித்துள்ளார்.

ரஜினிக்கு கொரோனா பாசிட்டிவ்: டுவீட் போட்டு பின் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்!

ரஜினிகாந்த்துக்கு கொரோனா பாசிட்டிவ் என காமெடிக்கு ஒரு டுவிட் போட்டு அதன் பின் ரஜினி ரசிகர்களால் கண்டனம் தெரிவிக்கப்பட்டதால் தனது செய்கைக்கு வருத்தம் தெரிவித்த பாலிவுட் நடிகர்