பாஜகவில் இணைந்த பிரபல நடிகை: கிரிக்கெட் வீரரும் இணைந்தார்!

  • IndiaGlitz, [Friday,February 26 2021]

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட இருக்கும் நிலையில் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் நடிகர்-நடிகைகள் முக்கிய அரசியல் கட்சிகளில் இணைந்து வருவதை பார்த்து வருகிறோம். குஷ்பு உள்பட ஒருசில நடிகர், நடிகைகள் தமிழக பாஜகவில் இணைந்து உள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு நடிகை பாஜகவில் இணைந்துள்ள தகவல் வெளிவந்துள்ளது

பிரபல வங்காள நடிகை பாயல் சர்கார் என்பவர் நேற்று பாஜக தலைவர் திலீப் கோஷ் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அவர் மட்டுமின்றி நடிகர் யாஷ் தாஸ்குப்தா, முன்னாள் கிரிக்கெட் வீரர் அசோக் திண்டா ஆகியோர்களும் பாஜகவில் இணைந்தனர். வங்காள மொழியில் கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள பாயல் சர்கார், சிறந்த நடிகைக்கான விருதை பலமுறை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் பெரும்பாலான ஆதரவையும் மீறி பாஜக ஆட்சியைப் பிடிக்க மிக தீவிரமாக முயற்சித்து வரும் நிலையில் அக்கட்சியின் நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் இணைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் நேற்று மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலும் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி, வங்காள நடிகர்கள் ராஜ் சக்கரவர்த்தி, காஞ்சன் மல்லிக், சயோனி கோஷ் ஆகியோர்கள் இணைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

சிம்பு-கவுதம் மேனன் படத்தின் கவிதைத்தனமான டைட்டில்!

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கவிருக்கும் திரைப்படம் ஒன்றின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டைட்டில் மற்றும் டைட்டில்லுக் போஸ்டர்

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் யார் யாருக்கு எவ்வளவு சம்பளம்?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் முதல் பாகம் ஓரளவுக்கு வெற்றி பெற்ற நிலையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் இரண்டாவது பாகம் மிகப்பெரிய வரவேற்பை மக்கள் மத்தியில்

களிமண் பிட்சா? இந்திய வீரர்களின் அசராத பந்து வீச்சால் நடந்த மேஜிக்!

இங்கிலாந்துக்கு இடையிலான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் தற்போது அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

சசிகலாவை சந்தித்த நடிகர் பிரபு: அரசியலில் குதிக்கின்றாரா?

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சமீபத்தில் விடுதலையான சசிகலாவை திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் வரிசையாக சந்தித்து வருகின்றனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

அதிமுக தொண்டர்கள் ஆதரவு எப்போதும்- ஈபிஎஸ், ஓபிஎஸ் பக்கமே!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் 73 ஆவது பிறந்த நாளை சிறப்பிக்கும் பொருட்டு அன்றைய தினம் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்