close
Choose your channels

நேற்று திருமணம், இன்று மருத்துவமனையில்: 75 வயது நடிகருக்கு நேர்ந்த பரிதாபம்!

Saturday, January 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

75 வயது நடிகர் ஒருவர், சக நடிகையை நேற்று திருமணம் செய்துகொண்ட நிலையில் இன்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வங்கமொழி திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் திபாங்கர் தே. 75 வயதான இவர் 49 வயதான டோலோன் என்பவருடன் கடந்த சில ஆண்டுகளாக லிவிங் டுகெதர் உறவில் இருந்துள்ளார். இந்த உறவை இருவரும் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீரென நேற்று இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். நண்பர்கள் மற்றும் உறவினர் முன்னிலையில் எளிமையாக இவர்களது திருமணம் நடந்தது. இந்த நிலையில் நேற்று திருமணம் நடந்த நிலையில் இன்று திடீரென்று திபாங்கர் தே அவர்கலுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று திருமணம் நடந்த நடிகர் ஒருவர் இன்று திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது வங்கமொழி திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.