close
Choose your channels

'தலைவி' படத்தில் சோபன்பாபு கேரக்டரில் பிரபல நடிகர்!

Tuesday, February 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்று கருதப்படும் ’தலைவி’ என்ற படத்தை இயக்குனர் விஜய் இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே. பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ஜெயலலிதா கேரக்டரில் நடித்து வரும் இந்த படத்தில் எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்தசாமி நடித்துள்ளார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் ஜெயலலிதாவுடன் அதிக படங்களில் நடித்த நடிகர்களில் ஒருவர் சோபன்பாபு. இவரது கேரக்டரில் பிரபல பெங்காலி நடிகர் ஜிஷூ சென்குப்தா அவர்கள் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே இவர் கங்கனாவுடன் ஒரு பாலிவுட் படத்தில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் வரும் ஜூன் 26-ம் தேதி வெளியாக உள்ளது. ஜிவி பிரகாஷ்குமார் இசையில் நீரவ்ஷா ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.