close
Choose your channels

சிவகார்த்திகேயனுக்கு தவறான விருதா? நெட்டிசன்களால் பரபரப்பு

Friday, July 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக அரசு நேற்று 2009-2014 ஆம் ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகளை அறிவித்துள்ளது. இந்த விருதினால் திரையுலகினர் மகிழ்ச்சியாக இருக்கும் நிலையில் நெட்டிசன்கள் சிவகார்த்திகேயனுக்கு தவறாக விருது கொடுக்கப்பட்டுள்ளதாக பிரச்சனையை கிளப்பியுள்ளனர்.

கடந்த 2011ஆம் ஆண்டிற்கான சிறந்த விருதுகள் பட்டியலில் சிறந்த படம் சிறப்பு பரிசு விருது இயக்குனர் பாண்டியராஜனின் 'மெரினா' படத்திற்கும், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இதே படத்திற்காக சிறந்த நடிகர் சிறப்பு பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் 'மெரினா' திரைப்படம் 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி தான் ரிலீஸ் ஆனது என்றும், 2012ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன ஒரு படத்திற்கு 2011அம் ஆண்டிற்கான விருது கிடைத்தது எப்படி? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

உண்மையில் 'மெரினா' திரைப்படம் 2012ஆம் ஆண்டில் வெளியானது என்றாலும் இந்த படம் 2011ஆம் ஆண்டிலேயே சென்சார் சான்றிதழ் பெற்றுள்ளது என்றும் அதனடிப்படையில் இந்த விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.