சிறந்த இயக்குனர் விருதினை பெறுகிறார் தனுஷ்

  • IndiaGlitz, [Tuesday,June 20 2017]

நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல்வேறு அவதாரங்களில் ஜொலித்த தனுஷ் சமீபத்தில் இயக்குனராகி இயக்கிய படம் 'ப.பாண்டி. இந்த திரைப்படம் அனைத்து தரப்பினர்களாலும் வரவேற்கப்பட்டதோடு வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றி பெற்று 50 நாட்களை தாண்டியது.

இந்த நிலையில் சலங்கை ஒலி, சங்கராபரணம் புகழ் பழம்பெரும் இயக்குனர் கே.விஸ்வநாத் பெயரில் விருதுகளை நடிகை துளசி வழங்க உள்ளார். 'சங்கராபரணம்' என்ற பெயரில் வழங்கப்படவுள்ள இந்த விருதுகள் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழி துறையினருக்கு வழங்கப்பட உள்ளதாக நடிகை துளசி தெரிவித்துள்ளார்.

இதன்படி இந்த ஆண்டிற்கான 'சங்கராபரணம் விருது 'தங்கல்' இந்திப் படத்தில் சிறப்பாக நடித்த அமிர் கான், 'உட்தா பஞ்சாப்' படத்தில் சிறப்பாக நடித்த அலியா பட், 'ப.பாண்டி' படத்தை சிறப்பாக இயக்கிய தனுஷ், 'ஜனதா காரேஜ்' என்ற தெலுங்கு படத்தில் சிறப்பாக நடித்த ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு விருது வழங்கப்படவுள்ளதாக நடிகை துளசி அறிவித்துள்ளார்.

More News

விஜய் ரசிகர்களுக்கு அட்வான்ஸ் இன்ப அதிர்ச்சி: அதிகாரபூர்வ தகவல்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் விஜய் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம், ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ளதாவது: 

ஆர்ஜே பாலாஜிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ரேடியோ ஜாக்கியாக இருந்து சின்னத்திரை அதன் பின்னர் வெள்ளித்திரைக்கு வந்து, இன்று முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருக்கும் ஆர்ஜே பாலாஜி, இன்று தனது பிறந்த நாளை சிறப்புடன் கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு நமது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கிய அறிவிப்பு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று தலைவர் பதவியை விஷால் பொறுப்பேற்று கொண்டதில் இருந்தே அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை தயாரிப்பாளர்களின் நன்மைக்காக எடுத்து வருகிறார்...

'விஸ்வரூபம் 2' படத்தின் துருக்கி வதந்திக்கு படக்குழு விளக்கம்.

உலக நாயகன் கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

சொந்த வீடு உள்ளவர்களுக்கு மத்திய அரசின் ஆதார் ஆப்பு!

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கு ஆதார் அட்டை என்பது கட்டாயம் என்றும் ஆதார் அட்டை இல்லாமல் வரும் காலத்தில் எந்த ஒரு செயலையும் செய்ய முடியாத நிலை வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது....