நடிகர் சங்கத் தேர்தல் நிறுத்தம்: அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பாக்யராஜ்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி ஞாயிறு அன்று நடைபெறவிருந்த நிலையில் சற்றுமுன் மாவட்ட பதிவாளர் இந்த தேர்தலை நிறுத்த அதிரடியாக உத்தரவிட்டார்.

வாக்காளர் பட்டியலில் குளறுபடி, தேர்தல் நடத்தும் இடத்தில் பாதுகாப்பு, தேர்தல் நடத்தும் அதிகாரி மீது குற்றச்சாட்டு போன்ற பல காரணங்களால் இந்த தேர்தல் நிறுத்தப்பட்டதாக தெரிகிறது.

நடிகர் சங்க தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவோம் என நம்பிக்கையாக இருந்த பாண்டவர் அணியினர்களுக்கு இந்த உத்தரவு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

இந்த நிலையில் நடிகர் சங்க தேர்தல் நிறுத்தம் குறித்த உத்தரவு குறித்து சுவாமி சங்கரதாஸ் அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கே.பாக்யராஜ் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'நடிகர் சங்கத் தேர்தல் நிறுத்தப்பட்டது அதிர்ச்சி அளிப்பதாகவும், சுவாமி சங்கரதாஸ் அணி நிர்வாகிகளுடன் கலந்து பேசி அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஏற்கனவே இந்த தேர்தலை நடத்த விடமாட்டேன், சட்டப்படி தேர்தலை நிறுத்துவேன் என்று கூறிய நடிகர் ராதாரவி, சமீபத்தில் அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

40 வருடம் பணிபுரிந்த தபேலா கலைஞருக்கு இசைஞானி இறுதி மரியாதை!

இசைஞானி இளையராஜாவிடம் கடந்த 40 ஆண்டுகளாக தபேலா கலைஞராக பணிபுரிந்த கண்ணையா என்பவர் இன்று காலமானார்.

'தளபதி 63' அப்டேட்டுக்கு திமுக எம்.எல்.ஏ வாழ்த்து

விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு இடைவெளியின்றி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும்

நடிகர் சங்கம் தேர்தலை நிறுத்த உத்தரவு: திரையுலகில் பரபரப்பு

நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் இந்த தேர்தலை உடனடியாக நிறுத்த மாவட்ட பதிவாளர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

அரவிந்தசாமியின் 'புலனாய்வில்' இணைந்த பிரபல இயக்குனர்!

நடிகர் அரவிந்தசாமி நடிப்பில் இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார் இயக்கவுள்ள திரைப்படத்தின் டைட்டில் 'புலனாய்வு' என்ற அறிவிப்பு நேற்று வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

'பிக்பாஸ் 3' திட்டமிட்டபடி நடக்குமா? சென்னை ஐகோர்ட்டில் புதிய வழக்கு!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களின் பேராதரவை பெற்றது.