பாண்டவர் அணியை அடுத்து ஆளுனரை சந்தித்த பாக்யராஜ் அணி

நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக நேற்று பாண்டவர் அணியின் சார்பில் நடிகர்கள் விஷால், கருணாஸ் மற்றும் பூச்சிமுருகன் ஆகியோர் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் அவர்களை சந்தித்து ஆலோசனை செய்தனர். அவர்கள் ஆலோசனை செய்த சில நிமிடங்களில் நடிகர் சங்க தேர்தல் ரத்து என்ற அறிவிப்பு வெளியானது

இந்த நிலையில் பாண்டவர் அணியை அடுத்து பாக்யராஜ் அணியினர்களும் இன்று காலை 11 மணிக்கு தமிழக ஆளுனரை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது பாக்யராஜ், ஐசரி கணேஷ், குட்டி பத்மினி, பிரசாந்த், சங்கீதா ஆகியோர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

நடிகர் சங்க தேர்தல் நடத்தும் இடம், யாருடைய மேற்பார்வையில் தேர்தலை நடத்துவது என்பது குறித்து பாக்யராஜ் அணியினர் கவர்னரிடம் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது

பாண்டவர் அணி, பாக்யராஜ் அணி ஆகிய இரு அணியினர்களும் முதல்வர், துணை முதல்வர் மற்றும் செய்தி-விளம்பரத்துறை அமைச்சர் ஆகியோர்களை சந்திக்காமல் ஆளுனரை சந்தித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

More News

சூப்பர் ஹிட் ஹாரர் காமெடி படத்தின் 3ஆம் பாகத்தில் தமன்னா!

தெலுங்கில் வெளியான சூப்பர் ஹிட் ஹாரர் காமெடி படம் ஒன்றின் மூன்றாம் பாகத்தில் நடிக்க நடிகை தமன்னா ஒப்பந்தமாகியுள்ளார்.

பிறந்த நாளில் இறக்கை இல்லாமல் பறந்த அஞ்சலி!

தமிழ் திரையுலகில் நடிக்க தெரிந்த மிகச்சில நடிகைகளில் ஒருவரான அஞ்சலி, கனமான கதாபாத்திரங்களை ஏற்று ரசிகர்கள் மனதை கவர்ந்து வருவது தெரிந்ததே

வங்கியில் பணம் டெபாசிட் செய்தாலும் கட்டணம்: ஜூலை 1 முதல் அமல்!

வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கு சமீபத்தில் சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும் முறை அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது பணம் டெபாசிட் செய்வதற்கும் சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும்

சொந்தப்படம் தயாரிக்க 'சதுரங்க வேட்டை' பாணியில் நூதன மோசடி செய்த உதவி இயக்குனர்

மக்களின் பணம் சம்பாதிக்கும் ஆசையை தூண்டிவிட்டு மோசடி செய்வது குறித்த திரைப்படம் தான் 'சதுரங்க வேட்டை' இந்த படத்தின் பாணியில் ஒரு உதவி இயக்குனர் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க

ஹாலிவுட் செல்லும் ஸ்ருதிஹாசன்!

கோலிவுட் திரையுலகில் உருவாகும் படங்களில் ஹாலிவுட் கலைஞர்கள் பணிபுரிவதும், ஹாலிவுட் படங்களில் தமிழ் உள்ளிட்ட இந்திய நடிகர்கள் நடித்து வருவதும் கடந்த சில ஆண்டுகளாக அதிகமாக நிகழ்ந்து வருகிறது.