வாழ்த்து கூறிய கமலுக்கு நன்றி கூறிய பாக்யராஜ்

  • IndiaGlitz, [Sunday,January 08 2017]

இந்தியாவின் மிகச்சிறந்த திரைக்கதை ஆசிரியர், இயக்குனரான கே.பாக்யாரஜ், நேற்று தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடிய நிலையில் அவருக்கு கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

கே.பாக்யராஜ் அவர்களுக்கு சமூக வலைத்தளத்தில் கணக்கு எதுவும் இல்லை. எனினும் அவருடைய மகன் சாந்தனு, கமலின் டுவீட் குறித்து தந்தையிடம் கூறியுள்ளார். கமலின் வாழ்த்தை அறிந்து மகிழ்ச்சி அடைந்த பாக்யராஜ், மகனின் சமூக வலைத்தளம் கமலுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நன்றி கமல் சார். உங்களுடன் இணைந்து உதவி இயக்குனராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் பணிபுரிந்தது மறக்க முடியாது இனிமையான நினைவுகள் மட்டுமின்றி நிறைய அனுபவங்களையும் கற்று கொண்டேன்.

உங்களுடன் இணைந்து பணியாற்றிய தருணங்கள் எனக்கு ஒரு மைல்கல்லாக இருந்தது. இந்திய திரையுலகின் ஜாம்பவான்களாக எம்.ஜி.ஆர், சிவாஜி, அமிதாப், ரஜினி ஆகியோர்களுடன் பணிபுரிந்தது போன்ற உணர்வு எனக்கு உங்களுடன் பணிபுரிந்தபோது இருந்தது.

தங்களுடைய அன்பான வாழ்த்துக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்து கொள்கிறேன்' என்று கே.பாக்யராஜ் கூறியுள்ளார்.

More News

'எஸ் 3' படத்தை முந்துகிறதா 'தானா சேர்ந்த கூட்டம்'?

இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் அடுத்த படமான 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

தனுஷ்-விஜய்சேதுபதி வதந்திக்கு ஒரு முற்றுப்புள்ளி

இந்த படத்தில் விஜய்சேதுபதி தனக்கு கொடுத்த கேரக்டரில் கண்டிப்பாக நடிப்பார் என்றும் கூறி வதந்திக்கு படக்குழுவினர் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்...

ரஜினி, விஜய்க்கு நன்றி தெரிவித்த சிரஞ்சீவி

இளையதளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய சூப்பர் ஹிட் படமான 'கத்தி' படத்தின் ரீமேக் படமான 'கைதி நம்பர் 150' திரைப்படம் வரும் 11ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் புரமோஷன் விழா ஒன்றில் கலந்து கொண்ட மெகா ஸ்டார் சிரஞ்சிவி, இந்த படத்தின் ரீமேக் உரிமையை பெற்று தர உதவிய விஜய்க்கு தனது நன்றியை தெரிவித்தார்..

வாத்தியாருக்கு வாழ்த்து கூறிய கமல்ஹாசன்

பிரபல இயக்குனர், நடிகர், பத்திரிகையாளர், அரசியல்வாதி கே.பாக்யராஜ் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

கவுதம் மேனனின் 12th மேன் இவர்தான்.

பிரபல இயக்குனர் கவுதம்மேனன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சூர்யா நடிப்பில் இயக்கவிருந்த 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் எதிர்பாராத காரணத்தால் டிராப் ஆனது