எஸ்பிபிக்கு பாரத ரத்னா விருது வழங்க முயற்சிப்பேன்: பிரபல இசையமைப்பாளர்!

எஸ்பிபிக்கு பாரத ரத்னா விருது கிடைக்க முயற்சி செய்வேன் என பிரபல இசை அமைப்பாளரும், பாரத ரத்னா விருது குழுவில் இருக்கும் உறுப்பினர்களில் ஒருவருமான கங்கை அமரன் தெரிவித்துள்ளார்

பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு குடியரசுத் தலைவர் முதல் சாதாரண ரசிகர்கள் வரை இரங்கல் தெரிவித்தனர் என்பதும் அவருடைய இறுதிச் சடங்கில் ஏராளமான பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் எஸ்பிபியுடன் பழகிய நினைவுகள் குறித்து பல்வேறு திரையுலக பிரமுகர்கள் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் பிரபல இசை அமைப்பாளரும் எஸ்பிபியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான கங்கை அமரன் அவர்கள், ‘எஸ்பிபி அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கான முயற்சிகளை நான் செய்வேன் என்று கூறியுள்ளார்

பாரத ரத்னா விருது வழங்கும் குழுவில் நானும் ஒரு உறுப்பினராக இருப்பதால் அவருக்குப் புகழ் சேர்க்கும் வகையில் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன் என்று கூறியுள்ளார்

ஏற்கனவே புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியின்போது ’எஸ்பிபிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்’ என்று வேண்டுகோள் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது