close
Choose your channels

பாடல்களே இல்லாத படத்தில் வாணிபோஜன்: ஹீரோ யார் தெரியுமா?

Sunday, April 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாடல்களே இல்லாமல் உருவாகி வரும் திரைப்படம் ஒன்றில் நாயகியாக வாணிபோஜன் நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் ஹீரோவாக இளையதலைமுறை நடிகர்களில் ஒருவர் நடித்து வருகிறார்.

சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்த நடிகைகளில் ஒருவர் வாணி போஜன் என்றும் இவர் சுமார் 5 படங்களில் தற்போது நடித்து பிஸியான நடிகைகளில் ஒருவராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பரத் ஹீரோவாக நடிக்கும் படமொன்றில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் வாணிபோஜன். அறிமுக இயக்குனர் சக்திவேல் என்பவர் இயக்கும் இந்தப் படம் த்ரில் மற்றும் குடும்ப கதையம்சம் கொண்டது என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் பரத் இன்ஜினியராக நடித்து வருவதாகவும், அவருடைய மனைவியாக வாணிபோஜன் நடித்துள்ளதாகவும் இயக்குனர் சக்திவேல் கூறியுள்ளார். இந்த படத்தின் திரைக்கதை எழுதும்போதே பரத், வாணிபோஜன் ஆகிய இருவரையும் மனதில் வைத்துதான் எழுதியதாகவும் தயாரிப்பாளரிடம் இதைக் கூறியபோது மிகச் சரியான தேர்வு என அவர் தன்னை பாராட்டியதாகவும் இயக்குனர் சக்திவேல் கூறியுள்ளார்.

பரத், வாணிபோஜன் ஆகிய இருவருக்கும் சமமான அளவில் முக்கியத்துவம் தரும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் காற்றாலை மின்சாரம் தயாரிக்கும் இடத்தில் நடக்கும் ஒரு திகில் சம்பவம் தான் இந்த படத்தின் கதை என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசி அம்பாசமுத்திரம் மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் நடப்பதாகவும் இயக்குனர் சக்திவேல் கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் கேஎஸ் ரவிக்குமார், துளசி, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருவதாகவும், இந்த படத்தில் பாடல்களே இல்லை என்றும் அதுமட்டுமின்றி குறைந்த கேரக்டர்கள் மட்டும்தான் இந்த படத்தில் நடிக்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.