'ஆர்.ஆர்.ஆர்' பாடலுக்கு செம டான்ஸ் ஆடும் நடிகர் பரத்தின் டுவின்ஸ்! வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Monday,January 03 2022]

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தின் ’நாட்டு நாட்டு’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த பாடல் மிகப் பெரிய அளவில் வைரலான நிலையில் நடிகர் பரத்தின் இரட்டை குழந்தைகள் இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோ அவரது சமூக வலைத்தளத்தில் பதிவாகி நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான பரத், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய ’பாய்ஸ்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது நீண்டநாள் தோழியான ஷெல்லி என்பவரை கடந்த 2013ஆம் ஆண்டு பரத் திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு 2018ஆம் ஆண்டு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் பரத் தனது இரட்டை குழந்தைகளின் புகைப்படத்தை மற்றும் வீடியோக்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருவார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன் அவர் ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ’நாட்டு நாடு’ என்ற பாடலுக்கு தனது இரட்டை குழந்தைகள் நடனம் ஆடியதன் வீடியோவை பதிவு செய்துள்ளார். கிட்டத்தட்ட ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் தேஜா ஆடியது போலவே பரத்தின் டுவின்ஸ் குழந்தைகள் ஆடுவது மிகவும் க்யூட்டாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வுகள் நடைபெறுமா?

தமிழகத்தில் இன்றுமுதல் 15-18 வயதுடைய சிறுவர், சிறுமிகளுக்கு

கோலி 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து திடீர் விலகல்… என்ன காரணம்?

தசைப்பிடிப்பு காரணமாக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான

டெஸ்லாவின் முதல் ஊழியரே ஒரு தமிழரா? இணையத்தில் வைரலாகும் தகவல்!

சமீபகாலமாக மின்சார கார் உற்பத்தி மற்றும் விண்வெளி துறை

தோனி மீது பரபரப்பு புகார் கூறிய முக்கிய வீரர்… திடீர் பல்டியடித்த சம்பவம்!

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் நான் இந்திய அணியில் இடம்பெறாததற்கு முன்னாள் கேப்டன்

நயன்தாராவுக்காக விக்னேஷ் சிவன் உருகி உருகி எழுதிய பாடல்: வீடியோ வைரல்

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்காக அவரது காதலர் விக்னேஷ் சிவன் உருகி உருகி எழுதிய பாடலின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.