ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பாரதி கண்ணம்மா ரோஷினி: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Tuesday,November 16 2021]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ’பாரதி கண்ணம்மா’ என்பதும் இந்த சீரியல் இல்லத்தரசிகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக கருதப்படுகிறது என்பதும் இந்த சீரியலின் நாயகி ரோஷினிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோஷினி என்பவர் திடீரென இந்த சீரியல் இருந்து விலகி விட்டதாகவும் அவருக்கு பதிலாக வினுஷா என்பவர் இந்த கேரக்டரில் நடித்து வருவதாகவும் செய்திகள் வெளியானது வினுஷ நடித்த காட்சி நேற்று முதல் ஒளிபரப்பானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘பாரதி கண்ணம்மா’ என்ற சீரியல் மூலம் கிடைத்த பிரபலம் காரணமாக ரோஷினிக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும் அதனால்தான் அவரை சீரியல் இருந்து விலகுவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது ரோஷினி முதல்முறையாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் ஒரு சில காரணங்களால் என்னால் தொடர முடியவில்லை என்றும், என்னுடைய இந்த முடிவு உங்களை காயப்படுத்தி இருந்தால் தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள் என்றும், உங்கள் ஆதரவு இல்லாமல் இவ்வளவு தூரம் என்னால் வந்திருக்க முடியாது என்றும், எதிர்காலத்திலும் இதே போன்ற ஆதரவு எனக்கு தருவீர்கள் என்று நம்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். ரோஷினியின் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

More News

திருடர்களிடம் மல்லுக்கட்டிய பிரபல நடிகை.. வாக்கிங் சென்றபோது விபரீதம்!

தெலுங்கு சினிமாவில் நடித்துவரும் நடிகை ஒருவரை வழிப்பறி கொள்ளையர்கள் தாக்கி அவரிடம் இருந்து விலையுயர்ந்த செல்போன்

வரிச்சலுகையுடன் திரையரங்குகளில் 'ஜெய்பீம்': முதல்வருக்கு கோரிக்கை வைத்த முன்னாள் அமைச்சர்

'ஜெய்பீம்' திரைப்படத்திற்கு வரிச்சலுகை அளித்து திரையரங்குகளில் வெளியிட தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என முன்னாள் கர்நாடக அமைச்சர் ஒருவர்

கண்ணாடி டாஸ்க்: சிபி-அக்சராவை கோர்த்துவிட்ட பிக்பாஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 40 நாட்களுக்கும் மேலாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று போட்டியாளர்களுக்கு 'உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி' என்ற டாஸ்க் வழங்கப்படுகிறது

ஒடுக்கப்பட்டவர்களின் குரலை எதிரொலிக்கும் ஜிவி பிரகாஷின் 'ஜெயில்'!

ஒடுக்கப்பட்டவர்களின் குரலை எதிரொலிக்கும் வகையில் ஜிவி பிரகாஷின் ஜெயில் படம் அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். வசந்தபாலன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் நடித்து இசையமைத்த 'ஜெயில்

'ஜெய்பீம்' விவகாரம்: பாமக அன்புமணிக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முக்கிய கோரிக்கை

அரசியல், ஜாதி, மத, சார்பின்றி கல்விப்பணியில் கலங்கரை விளக்கமாக செயல்பட்டு வரும் சூர்யாவை விமர்சிப்பதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்கிறோம் என பாமக எம்பி அன்புமணி ராமதாஸ்