பாரதிராஜாவால் அறிமுகமான நடிகர் இறந்துவிட்டதாக வதந்தி: வீடியோ வெளியிட்டு விளக்கம்..!

  • IndiaGlitz, [Sunday,May 28 2023]

பாரதிராஜாவின் ’கிழக்கே போகும் ரயில்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் சுதாகர் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி கிளம்பிய நிலையில் தான் நலமுடன் இருப்பதாக வீடியோ வெளியிட்டு சுதாகர் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 1978 ஆம் ஆண்டு வெளியான ’கிழக்கே போகும் ரயில்’ என்ற படத்தில் தான் நடிகர் சுதாகர் மற்றும் நடிகை ராதிகா ஆகிய இருவருமே அறிமுகமாகினர். இதனை அடுத்து ’மனிதர்கள் இத்தனை நிறங்களா’ ’இனிக்கும் இளமை’ ’மாந்தோப்பு கிளியே’ ’பொண்ணு ஊருக்கு புதுசு’ ’நிறம் மாறாத பூக்கள்’ உள்பட பல படங்களில் ஹீரோவாக நடித்தார். அதன் தெலுங்கு திரையுலகில் பல படங்களில் அவர் காமெடி நடிகராகவும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் சுதாகர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென அவர் இறந்து விட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவியது.

இதனை அடுத்து நடிகர் சுதாகர் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டு ’தன்னை பற்றி வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் பொய்யானவை என்றும் தான் நலமாகவும் மகிழ்ச்சியாகவும் உடல் நலத்துடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

More News

மீரா ஜாஸ்மின் அம்மாவை பார்த்து இருக்கிறீர்களா? இதோ வைரல் புகைப்படம்..!

நடிகை மீரா ஜாஸ்மின் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

ரோகிணி தியேட்டர் ஓப்பன் மைதானத்தில் ஐபிஎல் ஃபைனல்.. டிக்கெட் எவ்வளவு தெரியுமா?

சென்னை ரோகிணி தியேட்டர் ஓபன் மைதானத்தில் இன்று ஐபிஎல் இறுதிப்போட்டி எல்இடி ஸ்கிரீனில் ஒளிபரப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஃபைனல்.. நேற்று செகண்ட் லுக்.. தல தோனிக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று குஜராத் அணியுடன் ஐபிஎல் இறுதிப் போட்டியில் மோத இருக்கும் நிலையில் தல தோனி தயாரிக்கும் 'எல்.ஜி.எம்' திரைப்படத்தின் செகண்ட்

பொய் செய்தி பரப்புபவர்கள் ஒரு நல்ல புகைப்படமாவது போடுங்கள்: கிருத்திகா உதயநிதி

என்னைப் பற்றி போய் செய்தி பரப்புபவர்கள் அந்த செய்தி உடன் ஒரு நல்ல புகைப்படத்தையாவது போடுங்கள் என கிருத்திகா உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

செங்கோல் சரியான இடத்துக்கு வந்திருக்கிறது: இசைஞானி இளையராஜா

புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் இன்று வைக்கப்பட்டுள்ள செங்கோல் குறித்து இசைஞானி இளையராஜா கூறிய போது 'செங்கோல் சரியான இடத்திற்கு திரும்ப வந்திருக்கிறது' என்று கூறியுள்ளார்.