close
Choose your channels

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் பாரதிராஜாவின் உதவியாளர்: அதிர்ச்சி தகவல்!

Tuesday, May 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உதவியாளரும் பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியவருமான தேன்மொழி தாஸ் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களில் பல திரையுலக பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் சிலர் பலியாகி உள்ளனர் என்பதும் அடுத்தடுத்து கொரோனாவுக்கு பலியாகி வரும் திரையுலக பிரபலங்கள் காரணமாக திரையுலகம் அதிர்ச்சியில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழ் திரைப்பட இயக்குனர் மு.களஞ்சியம் அவர்கள் தனது டுவிட்டரில் பாரதிராஜாவின் உதவியாளரும் பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியவருமான தேன்மொழி தாஸ் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவருக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் மேலும் கூறியிருப்பதாவது: இயக்குனர் பாரதிராஜாவின் உதவியாளரும்,ஏஆர்ரகுமான் போன்றவர்களிடம் 50 க்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதியவருமான கவிஞர் தேன்மொழி தாஸ் கடும் கொரோனா பாதிப்பால் கிண்டியில் “கிங்ஸ் இன்ஸ்ட்டியுட்” மருத்துவமனையில் கடந்த ஐந்து நாட்களாக உயிருக்கு போராடுகிறார். தமிழக அரசு உதவி செய்ய வேண்டுகிறேன்’ .
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.