இயக்குனர் சங்கத்தலைவர்: பாரதிராஜா எடுத்த அதிரடி முடிவு

  • IndiaGlitz, [Monday,July 01 2019]

இயக்குனர் சங்க தலைவராக ஒரு மாதத்துக்கு முன்னர் இயக்குனர் பாரதிராஜா ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இன்று திடிரென அவர் தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

கடந்த மாதம் நடைபெற்ற நமது சங்க பொதுக்குழுவில் நமது சங்க நிர்வாகிகள், இயக்குனர்கள், இணை-துணை இயக்குனர்கள், பேராதரவுடன் போட்டியின்றி என்னை தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு மிகவும் நன்றி. ஆனால் தேர்தலில் போட்டியிடாமல் ஒரு பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் அதனால் ஏற்படும் சங்கடங்களை நான் நன்கு உணர்ந்துள்ளேன். ஆகியால் ஜனநயக முறைப்படி தலைவரை தேர்ந்தெடுக்க வசதியாக எனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளேன். ஒரு மூத்த இயக்குனராக நமது சங்க வளர்ச்சிக்கும், உறுப்பினர்களின் எதிர்கால எனது வழிகாட்டலும் பேரன்பும் என்றும் தொடரும்' என்று பாரதிராஜா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.