close
Choose your channels

'சிகப்பு ரோஜாக்கள் 2' படம் குறித்து பாரதிராஜா மகன் விளக்கம்!

Wednesday, August 5, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில், இசைஞானி இளையராஜா இசையில் கடந்த கடந்த 1978ஆம் ஆண்டு உருவான திரைப்படம் ’சிகப்பு ரோஜாக்கள்’. இந்த திரைப்படம் நவீன தொழில்நுட்ப வசதி இல்லாத அந்த காலத்திலேயே ஒரு சில காட்சிகள் 3டி எபெக்ட் போல் எடுக்கப்பட்டு ரசிகர்களை மிரள வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது 42 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தை பாரதிராஜாவின் மகன் மனோஜ் இயக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. மேலும் கமல் வேடத்தில் நடிக்க சிம்பு உட்பட ஒரு சில நடிகர்கள் பரீலனையில் இருப்பதாகவும் கூறப்பட்டதை அடுத்து இதுகுறித்த செய்திகள் ஊடகங்களில் பரபரப்பாக வெளியானது. 

இந்த நிலையில் ’சிகப்பு ரோஜாக்கள் 2’ படம் குறித்து பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி விளக்கம் அளித்துள்ளார். கடந்த சில நாட்களாக ’சிகப்பு ரோஜாக்கள் 2’ படம் குறித்து வெளியாகிக்கொண்டு இருக்கும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. ஒருவேளை இந்த படத்தை உருவாக்குவதாக இருந்தால் அதை நானும் எனது தந்தை பாரதிராஜா அவர்களும் அதிகாரபூர்வமாக அறிவிப்போம்’ என்று மனோஜ் கூறியுள்ளார். இதனை அடுத்து ’சிகப்பு ரோஜாக்கள் 2’ திரைப்படம் குறித்த தகவல் வதந்தி என்பது உறுதியாகியுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.