ரஜினியை ஒரு அற்புத மனிதராக பார்க்கின்றேன்: பாரதிராஜா அறிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் தனது அரசியல் நிலைப்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். அவர் பேசிய அரை மணி நேர பேச்சில் முதல்வர் பதவிக்கு தகுதியான ஒருவரை அமர்த்துவேன் என்றும், சிஸ்டத்தை சரிசெய்வேன் என்றும், தமிழகத்தில் எழுச்சி புரட்சி உருவாக வேண்டும் என்றும் இப்போது புரட்சி ஏற்படவில்லை என்றால் எப்போதும் இல்லை என்றும் கூறினார். இந்த நிலையில் ரஜினியை அரசியல்ரீதியாக அதிகம் விமர்சனம் செய்த பாரதிராஜா, ரஜினியின் இந்த முடிவை வரவேற்றுள்ளார். அவர் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

எனது நாற்பது ஆண்டு கால நட்பில், இன்று இந்தச் சமூகம் உயர்ந்த உள்ளம், உயர்ந்த மனிதன், உயர்ந்த கலைஞன், சூப்பர் ஸ்டார் எனக் கொண்டாடும் 'ரஜினி' என்ற மந்திரத்தை விட, 'ரஜினி' என்ற மனிதம் எப்படி வெளிப்படும் என்று நான் முன்பே அறிந்திருக்கிறேன்.

இன்று அந்த மனிதம் வெளிப்படையாக, மக்களுக்கு நன்மை பயக்கும் புது கொள்கைகளை வரவேற்கிறது. தமிழன் தான் ஆட்சிக்குத் தலைசிறந்தவன் என்ற ரஜினியின் நாற்காலி கொள்கை, தமிழனின் வரலாறு, ஆகியவற்றின் மூலம் பேராசை என்ற சமூக விலங்கை உடைப்பதும் ரஜினி என்ற ஓர் உண்மைக்கே சாரும்.

ரஜினியின் அரசியல் கொள்கை, அரசியலாக அல்லாமல் தமிழுக்கும் தமிழ்மக்களுக்கும் நன்மை பயக்கும் விதமாக, சமயுக அரசியலில் யாரும் சிந்திக்காத ஒன்றாக, அன்று நான் அறிந்தவை, இன்று எம் தமிழக மக்களுக்கு ஓர் விதையாகக் கூட இருக்கலாம்.

ஆருயிர் நண்பன் என்பதை விட, சிறந்த மனிதனாக, ரஜினியின் 'நாணய அரசியலில்' அதன் முதல் பக்கத்திலேயே ஒரு தமிழனை 'அரசனாக' ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துவேன் என்ற மனிதத்தை, கொள்கைகளாகப் பார்க்காமல் அதை ரஜினியாக, ஓர் அற்புத மனிதனாகவே நான் பார்க்கிறேன்”

இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

More News

ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு: புதிய தேதி அறிவிப்பு

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டிகள் இந்த ஆண்டு மார்ச் 29ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது.

பெங்களூருவில் GOOGLE ஊழியருக்கு கொரோனா தொற்று..?! பரவாமல் தடுக்குமா அரசு..?!

எந்த ஒரு அறிகுறியும் தெரிவதற்கு முன்னர் வரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஊழியர் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்ததாக கூகுளின் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

கொரோனா பயமா??? சந்தேகங்களுக்கு உடனே தொடர்பு கொள்ளுங்கள்... 

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் 75 ஆக அதிகரித்து இருக்கிறது.

கொரோனா வைரசுக்கு ஜாதகம் கணித்த ஜோதிடர்

இந்தியா உள்பட உலகில் உள்ள 125 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி லட்சக்கணக்கானவர்களை ஆட்டிப்படைத்து வருகின்றது. இந்த வைரஸினால் ஐயாயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகிவிட்டபோதிலும்

ரஞ்சிதாவுக்கு பின் மீரா? இணையத்தில் வைரலாகும் வீடியோ

நடிகை ரஞ்சிதா, நித்தியானந்தாவின் ஆன்மீக கொள்கைகளால் கவரப்பட்டு அவருடைய பக்தையாகவே மாறிய நிலையில் தற்போது ரஞ்சிதாவை அடுத்து நித்தியானந்தாவை மிகவும் புகழ்ச்சியுடன் பேசி ஒரு வீடியோவை